பாய் ரஜினியின் மாஸ் போட்டோ.. வெளியானது லால் சலாம் புது போஸ்டர்!

லால் சலாம்
லால் சலாம்

லால் சலாம் படத்தின் புது போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சலாம் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிக்கின்றனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் இதில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

லால் சலாம் படத்தில் விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, விவேக் பிரசன்னா, தங்கதுரை ஆதித்யா மேனன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

இதன் இசை வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 26ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றதை தொடர்ந்து, இன்னும் சில நாட்களில் இப்படம் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. தமிழர்களை இழிவுபடுத்தி கருத்து பதிவிட்டதாக கூறப்படும் நடிகை தன்யா பாலகிருஷ்ணாவுக்கு லால் சலாம் படத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

இந்த படம் வெளியாகுமா என சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், லால் சலாம் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் உடன் விஷ்ணு விஷால், விக்ராந்த் இடம் பெற்றுள்ள இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com