

சென்னை போயஸ் கார்டனில் தனது வீட்டின் முன் கூடிய ரசிகர்களை நேரில் சந்தித்து நடிகர் ரஜினிகாத் புத்தாண்டு வாழ்த்துகள் கூறினார்.
2023 ஆம் ஆண்டு நிறைவடைந்த 2024 ஆம் ஆண்டு தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு நள்ளிரவில் புத்தாண்டு பிறந்ததும் இந்தியா முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியது. தமிழ்நாட்டில் மக்கள் கோயில், கடற்கரை என பல இடங்களில் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்றனர். பலரும் கேக் வெட்டி, வெடி வெடித்து புத்தாண்டைகொண்டாடி மகிழ்ந்தனர்.
அந்த வகையில் ரஜினி ரசிகர்கள் புத்தாண்டையொட்டி ரஜினி வீட்டின் வாசல் முன்பு குவிந்தனர். ஆண்டுதோறும் அவரின் பிறந்தநாளன்று ரஜினியை காண வீட்டின் வாசலில் குவிவார்கள். ஆனால் கடந்த 2 ஆண்டும் ரஜினி தரிசனம் இன்றி ரசிகர்கள் ஏமாற்றமடைந்து வீட்டுக்கு திரும்பி செல்வார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு புத்தாண்டு பிறந்ததையொட்டி, ரஜினியை காண ஏராளமானோர் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டு வாசலில் குவிந்தனர். தனிடையே வீட்டின் வாயில் அருகே வந்த ரஜினி அங்கு கூடியிருந்த ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகமூட்டி, தன்னுடைய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.ரஜினியை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் தலைவா தலைவா என கூச்சலிட்டனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.