"வருடா வருடம் அயோத்தி வருவேன்" நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் ஆண்டுதோறும் அயோத்தி சென்று ராமரை வழிபடுவேன் என தெரிவித்துள்ளார்.

வரலாற்று நினைவாக கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில், இன்று பிரம்மாண்டமாக குடமுழுக்குடன் திறக்கப்பட்டது. இந்த குடமுழுக்கில் ஏராளமான சாதுக்கள், மாநில முதலமைச்சர்கள், தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

51 அங்குலம் கொண்ட பால ராமர் சிலை பல்வேறு பூஜைகளுக்கு பிறகு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த வரலாற்று நினைவை தமிழகத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் நேரலையில் கண்டு வழிபட்டனர். கையில் வில், அம்புடன் தங்க நகை, ஆடை அணிந்த ராமரை கண்டு பக்தர்கள் மனமுருகி நின்றனர். ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதில் தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பல பிரபலங்களுக்கு நடுவில் முதல் வரிசையில் ரஜினிகாந்திற்கு சீட் வழங்கப்பட்டிருந்தது. எளிமையாக இருந்த ரஜினிகாந்த் மிகுந்த ஆன்மிக ஈடுபாட்டாளர். அடிக்கடி இமயமலை சென்று வரும் அவர் தற்போது அந்த வரிசையில் அயோத்தியையும் வைத்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கில் பங்கேற்று சென்னை திரும்பும் போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி, அதில் நான் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நிச்சயமாக வருடா வருடம் அயோத்தி சென்று ராமரை வழிபட்டு வருவேன் என கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com