ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் வெளியீடு... கொண்டாடும் ரசிகர்கள்!

ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் வெளியீடு... கொண்டாடும் ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் ஜெயிலர் படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் மோகன்லால், ஜாக்கி ஷெராப், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.

வில்லனாக நடித்து வரும் கன்னட சூப்பர் ஸ்டாரான ஷிவ ராஜ்குமார், சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ஆகியோர் இடம்பெற்ற டீசரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது.

இந்த படம் ஆகஸ்ட்10ஆம் தேதி வெளியாகவுள்ளா நிலையில், இதன் இசைவெளியீட்டு விழா வருகிற ஜூலை மாத இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் முதல் பாடல் 6ஆம் தேதி வெளியாகும் என அனிருத் அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் அறிவித்திருந்தார். எப்பொழுதும் நெல்சன் படங்களில் பாடல்கள் வெளியாகும்போது அதற்கான புரமோ வெளியாவது வழக்கம். அந்த வகையில் இந்த படத்திற்கான பாடல் புரோமோ 2 நாட்களுக்கு முன்பு வெளியானது.

வழக்கம்போல் அனிருத்தும், நெல்சனும் கிண்டலாக பேசிக்கொள்ளும் ப்ரோமோவில் பாடலாசிரியரும் இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்த பாடல் நேற்று இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை தமன்னா இந்த பாடலில் நன்றாக டான்ஸ் ஆடியுள்ளதாக பலரும் கமெண்ட் தெரிவித்துள்ளனர். மேலும் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள இந்த பாடலை படத்தில் தமன்னா பாடுவது போல் உருவாக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com