

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் அப்படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் என்ற செய்தி அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை தந்துள்ள நிலையில் இன்று அந்த படத்தின் தலைப்பு மற்றும் அதற்கான அறிவிப்பு நடைபெற்றது.
நடிகர் கமலஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது பட அறிவிப்பு சென்னையில் இன்று நடைபெற்றது. படத்திற்கு "தர்மன்" என பெயரிட்டு உள்ளனர்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அனிருத் இசையுடன் உருவாகும் இந்த படத்தில் ரஜினியுடன் சிம்ரன் , ராஷி கண்ணா போன்ற பிரபல நடிகைகள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இந்த பட விழாவில் பேசிய ரஜினி சுவாரஸ்யமாக பேசியது அங்கு கலகலப்பான சூழலை உருவாக்கியது. அவர் "நான் பேசினாலே பிரச்சனைதான். அது எனக்கும் பிரச்சனை. உங்களுக்கும் பிரச்சனை. பேசாமல் இருந்தால் இவர் வாயில் கொழுக்கட்டை இருக்கிறதா என்பார்கள் ..பேசினால் இதோ பேசிட்டாரு என அதற்கும் ஒரு பிரச்சனை செய்வார்கள். ரொம்ப நாள் கழித்து தான் தெரிந்தது நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது. நம்மை பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் எல்லாமும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம் என்று " என்று கூறியது சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.
இந்த படத்திற்கு முதலிலேயே மூன்று இயக்குனர்கள் நியமித்த நிலையில் நான்காவது இயக்குனராக அஸ்வத் மாரிமுத்து இருப்பது குறித்து ரஜினிகாந்த் குறிப்பிட்டார் .
"பேட்ட படத்திற்கு பிறகு நடிகை சிம்ரன் மீண்டும் இணைந்து நடிக்கிறேன்.அவர்கள் மூன்று பேருக்குமே வேறு வேறு படங்கள் இருந்தால் அவர்கள் இந்த படத்தில் இருந்து விலகினர்"."முதலில் ரவிக்குமார் இயக்குவதாக இருந்தது. பின்னர் சுந்தர் சி அதன் பிறகு சிபி சக்கரவர்த்தி என மாறி இறுதியாக அஸ்வத் இயக்க உள்ளார்.
சிபி சக்ரவர்த்தி சொன்ன கதை மிகவும் பிடித்திருந்தது. ரொம்ப சென்சிடிவ் சப்ஜெக்ட் மட்டுமின்றி அணு விஞ்ஞானி சம்பந்தப்பட்ட படம் என்பதால் கொஞ்சம் டைம் ஆகும் என்பதால் தள்ளி வைத்தோம்". எனக்கூறி இயக்குனர் மாற்றம் பற்றிய கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.
அவர் மேலும் பேசியதாவது,படத்தில் எல்லா பொறுப்புகளையும் கமல் என்னிடம் கொடுத்துவிட்டார் அதுவே கொஞ்சம் பயமாக இருந்தது.கதையை நான் கேட்கவில்லை நீங்களே கேட்டு சொல்லுங்கள் என கமல் மொத்த பொறுப்பையும் தன்மீது வைத்ததாகவும் குறிப்பிட்டார்.
இந்த கதையெல்லாம் வேண்டாம். கமல் நீங்கள் கதை கேட்டு ஓகே சொல்லுங்கள் என்றேன். அஸ்வத் மீது மிகப்பெரிய பொறுப்பு இருக்கு அதற்காக அவரை மட்டும் சொல்லவில்லை .இது ஒரு கூட்டு முயற்சி படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. " என்றவர் அஸ்வத்மாரிமுத்து இயக்கிய டிராகன் படம் பிடித்திருந்தால் அதில் ஒரு நல்ல மெசேஜ் இருந்தது என்றும் கூறியுள்ளார்.
கமலுடனான நட்பு பற்றியும் உணர்வு பூர்வமாக பேசினார் ரஜினி. "கமல் உடனான நட்பு பற்றி சொல்லவே தேவையில்லை . இயக்குனர் ஸ்ரீதர் இடம் என்னை சிபாரிசு செய்தவர் கமல் . 1977 ஆம் ஆண்டிலேயே கமல் மிகப் பெரிய நடிகராக இருந்தார். நான் அப்போதுதான் புதிதாக வந்தேன். இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் நடிக்க இயக்குனர் ஸ்ரீதரிடம் என்னை சிபாரிசு செய்தது கமல்தான். படத்தில் என் நடிப்பை வெகுவாக பாராட்டி ஒத்துழைப்பு கொடுத்தார் கமல். ஆரம்ப காலத்தில் எனக்கு கமல் செய்த உதவிகளையும் ஊக்கத்தையும் சொல்லிக் கொண்டே போகலாம்" என நெகிழ்ந்து கமலையும் நெகிழ வைத்தார்.
தர்மன் பட அறிவிப்பு விழாவில் பங்கேற்றபின் வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்தை சூழ்ந்த செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, படம் பற்றிய கேள்விக்கு பொழுதுபோக்கு மற்றும் கமர்சியல் என பதில் அளித்தவர் முதல்வர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தொடர்பான கேள்விக்கு பேசி விட்டேன் என ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
புதிய கதைக் களத்துடன் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து திரையில் காண்போம்.