RamMandirPranPrathistha
RamMandirPranPrathistha

களைகட்டியுள்ள அயோத்தி.. கங்கனா முதல் ரஜினிவரை.. திரைபிரபலங்கள் பங்கேற்பு!

Published on

யோத்தி ராமர் கோயிலில் இன்று குடமுழுக்கு நடைபெற்று வரும் நிலையில், ஏராளமான திரைபிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான பூஜைகள் கடந்த 16ஆம் தேதி தொடங்கின. 6 நாட்களாக பல்வேறு பூஜைகள் நடந்த நிலையில், இன்று பிரம்மாண்ட குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பூஜையை தொடங்கிவைத்தார்.

மேலும், இஸ்ரோ தலைவர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே தமிழ்நாட்டில் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார்.

இதே போன்று நடிகர் ஜாக்கி ஷெராப், ரன்பீர் கபூர், அமிர்தாபச்சன், அபிஷேக் பச்சன், சிரஞ்சீவி, ராம்சரண், சுமன், விவேக் ஓபராய், நடிகைகள் கங்கனா ரணாவத், கத்ரீனா கைப், ஆலியா பத், ஹேம மாலினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

களைகட்டியுள்ள அயோத்தியில் கலர் கலராக நட்சத்திர பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர். மேலும் இதில் பிரபல பாடகரான ஷங்கர் மகாதேவனும் பங்கேற்று ராம பஜனை பாடி அனைவரையும் பக்தியில் ஆழ்த்தினார்.

இதையும் படியுங்கள்:
சரியாகத் தூங்க முடியவில்லையா? இந்த 7 வைட்டமின்கள் குறை உள்ளதா என்று பாருங்கள்!
RamMandirPranPrathistha

ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி அயோத்தி முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com