பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் ரவி மோகன்..!!

Ravi mohan Arthi issues
Actor Ravi Mohan Apologies Facebook
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ரவி மோகன். கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக இவருக்கும் இவரது மனைவி குடும்பத்தினருக்கும் குடும்பத் தகராறு நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் மோசமாகி கொண்டிருக்கும் இந்த விவகாரம் ஏற்கனவே நீதிமன்றம் சென்றுள்ளது. இவர்களின் விவகாரத்து வழக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

வழக்கு ஒருபுறம் இருக்க , சமூக வலைதளங்களில் ஒரு சிலர் ரவி மோகனின் தோழியான பாடகி கெனிஷா குறித்து கடுமையாக விமர்சிக்க தொடங்கியிருந்தனர். இந்த விமர்சனத்தால் கடுமையான பாதிப்புக்கு உள்ளான கெனிஷா ரவி மோகனை விட்டு பிரிவதாகவும் சென்னையை விட்டு வெளியேறிதாகவும் அறிவித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரவி மோகன் , "இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு எனது தனிப்பட்ட விவகாரம் சார்ந்தது. நான் மிகவும் மென்மையான மனிதன், என்ன கேட்டாலும் விட்டுக் கொடுத்து விடுவேன் என்று எல்லாரும் நினைக்கின்றனர். அப்படி இருந்த என்னை தொடர்ந்து சீண்டி கொண்டிருக்கின்றனர். சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தனது வாழ்க்கை பாதிக்கப்படுவதற்கு மூன்றெழுத்து சினிமா நடிகையும் ஒரு காரணம் .என்னை அழிக்க நினைப்பவர்கள் நேரடியாக இங்கே வாருங்கள் அனைத்தையும் பார்த்துக் கொள்ளலாம்.

என் படங்கள் இனி எதுவும் ரிலீஸ் ஆகாது, எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை நான் எந்த திரைப்படங்களிலும் நடிக்க போவது இல்லை. என்னால் நடிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. எனக்கு நடந்த அவமானங்கள் எல்லாம் என்னால் தாங்க முடியவில்லை. அதனால் எனக்கு விவகாரத்து கிடைக்கும் வரை , இந்த சைபர் புல்லிங் நிற்கும் வரை , என்னை சீண்டி பார்க்கும் வரை என்னால் சினிமாவில் நடிக்க முடியாது" , என்று கோபமாகவும் கண்ணீருடனும் பேட்டி கொடுத்திருந்தார்.

இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு " இந்த வழக்கு முடியும் வரை ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் பொது வெளியிலோ ஊடகங்களிலோ ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சிக்க கூடாது, ஒருவர் மீது ஒருவர் எதிர்மறையான கருத்துக்களை பொதுவெளியில் தெரிவிக்க கூடாது" என்று குடும்ப நல நீதிமன்றம் ஒரு சில கட்டுப்பாடுகளை முன்கூட்டியே விதித்திருந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ரவி மோகனின் மனைவி , நீதிமன்றத்தின் தடை உத்தரவை மீறி ரவி ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததை எதிர்த்து சட்டரீதியாக மனு செய்து இருந்தார். நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக ரவி மோகன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவசர மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், ரவி மோகன் தரப்பிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். இதையடுத்து ரவி மோகன் நீதிமன்றத்தில் மன்னிப்பு கூறினார். மேலும் அவரது வழக்கறிஞர்கள் ரவி மோகனின் செயலுக்கு பரிகாரமாக பொது அறிவிப்பு மூலம் அவர் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தனர். அதன்படி ரவி தற்போது ஊடகங்களின் வாயிலாக தனது மன்னிப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் "எனது தனிப்பட்ட வாழ்க்கையை குறித்த கருத்துகளை நீதிமன்ற உத்தரவையும் மீறி பொதுவெளியில் பகிர்ந்ததற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.என்னுடைய தன்னிச்சையான இந்த பேச்சால் மனவேதனை அடைந்த என் குடும்பத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரிடம் நான் நான் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com