வாடகை வீட்டில் ரவி மோகன்…. 3BHK படவிழாவில் ரவி மோகன் சொன்ன அந்த தகவல்!

Ravi mohan
Ravi mohan
Published on

சித்தார்த், சரத்குமார், தேவையானி ஆகியோர் நடிப்பில் தற்போது வெளியாகவுள்ள 3BHK பட நிகழ்ச்சியில் ரவி மோகன் பேசியிருக்கிறார்.

சினிமா தொகுப்பாளர் மோகனின் இரண்டாவது மகன் ஜெயம் ரவி. ஒரு தொட்டில் சபதம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக  நடித்து சினிமா துறையில் அறிமுகமானவர் ஜெயம் ரவி. ஹீரோவாக நடித்த முதல் படமே (ஜெயம்) இன்றளவும் பேசப்பட்டு வரும் ஒரு படமாக இருந்து வருகிறது. இந்த படத்தின்மூலம்தான் அவருக்கு ஜெயம் ரவி என்ற பெயரும் வந்தது. அதன்பின்னர் எம்.குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி, தாஸ், மழை, உனக்கும் எனக்கும், தீபாவளி, பேராண்மை, தில்லாலங்கடி போன்ற பல படங்களில் நடித்து தொடர் ஹிட் படங்களைக் கொடுத்தார்.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் ராஜ ராஜ சோழனாக நடித்து பிரபலமானார். இதனையடுத்து ஜெயம் ரவி நடிப்பில் சைரன் என்ற படம் வெளியாகி விமர்சன ரீதியாக வெற்றிபெற்றது. இதற்கிடையே ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்திக்கும் தனக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதன் தொடரச்சியாக தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றிக்கொண்டார்

இதனையடுத்து தற்போது 3BHK பட விழாவில் கலந்துக்கொண்டு பேசிய ரவி மோகன், “நான் பிறந்ததில் இருந்தே வாடகை வீட்டில் இருந்தது இல்லை. சொந்த வீட்டில் தான் இருந்திருக்கிறேன். ஆனால், இப்போது வாடகை வீட்டில் இருப்பதால் என்னால் இந்த கதையை தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. இந்தப் படத்தை நான் பார்த்துவிட்டேன். மிகப்பெரிய உணர்வாக இந்த படம் எனக்கு அமைந்தது. அதே உணர்வு உங்களுக்கும் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
DMT: மனித மூளையின் மர்மப் பயணி... மரணத்திற்கு முந்தைய அனுபவம்?
Ravi mohan

பாலு மகேந்திரா அவர்களின் ‘வீடு’ எந்தளவுக்கு பேசுபொருளாக அமைந்ததோ அதுபோல இந்தப் படமும் உங்களுக்கு அமையும். நானும் சித்தார்த்தும் ஒன்றாக வளர்ந்தோம். நான் பிறந்ததில் இருந்தே வாடகை வீட்டில் இருந்தது இல்லை. சொந்த வீட்டில் தான் இருந்திருக்கிறேன். ஆனால், இப்போது வாடகை வீட்டில் இருப்பதால் என்னால் இந்த கதையை தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. சரத் சார், தேவயாணி மேம் சிறந்த நடிகர்கள். நல்ல கதைகளையும் படங்களையும் பார்க்க வேண்டும் என விரும்புவர்களுக்கான படமாக இது இருக்கும்.” என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com