

கீனு ரீவ்ஸ்:
மேட்ரிக்ஸ் திரைப்பட நடிகர் கினுரீவ்ஸ் தான் சிறுவயதில் இருந்த போது ஒரு பேயைப் பார்த்ததாகக் கூறினார். அவர் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த போது அவரது பாதுகாப்பாளர் பெண்மணி ரெனாட்டா படுக்கையறையில் இருந்தார். அவரது சகோதரியும் அங்கு தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவ்வப்போது அந்த அறைக் கதவு திறந்து மூடிக் கொண்டிருந்தது .உருவம் இல்லாத ஜாக்கெட் ஒன்று அங்குமிங்கும் அசைந்து கொண்டிருக்கும். அதற்கு கை கால்கள் இருக்காது , ஆனால் , நடமாடிக் கொண்டிருந்தது. இது சுவாரசியமாக தனக்கு இருந்ததாக கூறியுள்ளார்.
ரன்வீர் சிங்:
பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் பேயுடனான தனது அனுபவத்தை கூறியுள்ளார். பாஜிராவ் மஸ்தானி படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அங்குள்ள வெள்ளை சுவர் மீது கருப்பு துகள்கள் பேஷ்வா உருவத்தில் படித்ததாக கூறியுள்ளார். மேலும் சில கடினமான காட்சிகளை நடித்துக்கொண்டிருக்கையில் வேறு யாரோ ஒருவர் அங்கு இருப்பது போல உணர்ந்துள்ளார்.
ராஜ்குமார் ராவ்:
ஸ்திரி திகில் படத்தில் நாயகனாக நடித்தவர் ராஜ்குமார் ராவ். ஸ்திரி திரைப்பட படப்பிடிப்பின் போது அவர்கள் தங்கிய அறைகளில் வாசனை திரவியங்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் , பெண்கள் தலைமுடியை விரித்து போடக் கூடாது எப்போதும் தனியாக இருக்கக் கூடாது , கூட்டத்தினருடன் இருக்க வேண்டும் என்று கூறி பயமுறுத்தியுள்ளனர். படப்பிடிப்பின் போது அங்கு யாரோ ஒருவர் லைட்மேனை மேலே இருந்து தள்ளி விட்டுள்ளனர். அதில் காயம்பட்ட அவரை மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். விசாரித்ததில் அந்த இடத்தில் மனிதர் யாரும் இல்லை என்று தெரிந்துள்ளது. அதன் பின்னர் அந்த இடத்தில் அனைவரும் சேர்ந்து மன்னிப்பு கேட்டு விட்டு படப்பிடிப்பை நடத்தியதாக தெரிவித்துள்ளார்.
ஜெசிகா ஆல்பா :
ஹாலிவுட் நடிகையான ஜெசிகா ஆல்பா உலகம் முழுவதும் பெயர் பெற்ற பிரபலமான ஒரு நடிகை .அவர் சிறுமியாக இருந்த போது பேயினால் பாதிக்கப்பட்ட அனுபவத்தை ஒரு முறை கூறியுள்ளார். அவரது சிறுவயதில் ஒருநாள் கண்ணுக்கு தெரியாத ஒரு உருவம் படுக்கையில் அவரை அமுத்தியது போல உணர்ந்துள்ளார். அந்த நேரம் அவரது உடலை அசைக்கவும் கத்தவும் முடிய வில்லை. அதன் பிறகு அவர் எழுந்து, அலறிக் கொண்டே தன் பெற்றோர்களின் அறையை நோக்கி ஓடினார். அந்த பழைய வீட்டில் ஏதோ ஒரு நடமாட்டம் இருப்பதாக அவர்கள் குடும்பத்தினர் கருத்தினார்கள். ஜெசிகா இருந்த அறையில் உள்ள சில பொருட்களை மதபோதகர் மூலம் எரித்து விட்டு, அவருக்கு ஆவி ஓட்டியுள்ளனர்.
பிபாஷா பாசு:
தமிழில் சச்சின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த பிபாஷா பாசு பாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகையாக இருந்துள்ளார். அவர் ராஸ் , ஆத்மா போன்ற பல திகில் படங்களில் நடித்துள்ளார். ஆனால் 'கிரியேச்சர் 3D' படப்பிடிப்பிற்குப் பிறகு தொடர்ச்சியாக அமானுஷ்ய உருவம் ஒன்று தன்னை தொடர்ச்சியாக பின் தொடர்வதை உணர்ந்துள்ளார். அந்த திரைப் படத்தில் வந்த ராட்சச உருவம் , அவரை திரைக்கு வெளியேயும் தொடர்ந்து அவரை துரத்தியுள்ளது. அவரது கனவிலும் அது தொடர்ந்தது. அதன் பின்னர் ஒரு பூசாரியை அணுகி , சில பூஜைகள் செய்து அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.