
திரைப்படங்களின் மூலம் பொதுமக்களுக்கு தேசப்பற்றை ஊட்டிய நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன். ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த அர்ஜூன், சமீப காலமாக திரைப்படங்களில் வில்லன் மற்றும் இயக்குநர் அவதாரம் எடுத்து வருகிறார். இவரது நடிப்பில் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெய்ஹிந்த் திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இன்று வரையிலும் இத்திரைப்படத்தின் தாக்கம் ரசிகர்கள் மத்தியில் இருப்பதை சுதந்திர மற்றும் குடியரசு தினங்களில் காண முடிகிறது. இப்படத்தில் வரும் தாயின் மணிக்கொடி பாடலும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் கவுண்டமணியுடன் ஒருநாள் நடிக்கும் போது, இவருடன் என்னால் நடிக்க முடியாது என சொல்லியுள்ளார் அர்ஜூன். அவர் ஏன் அப்படி சொன்னார் என்ற சுவாரஸ்யமான தகவலை இப்போது பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களின் பட்டியலை எடுத்துக் கொண்டால், அதில் கவுண்டமணியின் பெயர் எப்போதும் முன்னணியில் இருக்கும். நக்கல் நையாண்டி கலந்த காமெடி காட்சிகளில் மிகச் சிறப்பாக நடிக்கக் கூடியவர் கவுண்டமணி. இவரது காமெடி காட்சிகள் என்றென்றும் ரசிக்கக் கூடிய வகையில் அமைந்திருப்பது தான் தனிச்சிறப்பு. பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்திருக்கும் கவுண்டமணி, கதாநாயகனாகவும் சில படங்களில் நடித்துள்ளார். இவருடன் காமெடி காட்சிகளில் சக நடிகர்கள் நடிப்பது அவ்வளவு சாதாரணம் கிடையாது. ஏனெனில் இவருடன் சேர்ந்து நடிக்கும் போதே பலருக்கும் சிரிப்பு வந்து விடும். அந்த அளவிற்கு காமெடியில் கலக்குவார். குறிப்பாக கவுண்டமணி செந்தில் காம்போ கலந்த காமெடிகள் பலருக்கும் ஆல் டைம் ஃபேவரைட் பட்டியலில் இடம் பிடித்திருக்கும்.
தமிழ் சினிமாவில் இருப்பதிலேயே மிகவும் கடினமான செயல் என்றால் அது கவுண்டமணியுடன் காமெடி காட்சிகளில் நடிப்பது தான் என அர்ஜூன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். ஜெய்ஹிந்த் படத்தில் காமெடி காட்சிகளை எழுதியவர் கதாநாயகன் அர்ஜூன் தான். இப்படத்தில் காமெடியில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் கவுண்டமணி.
இதுகுறித்து அர்ஜூன் மேலும் கூறுகையில், “காமெடி காட்சிகளை எழுதிவிட்டு, அதனை ஷூட்டிங் ஸ்பாட்டில் கவுண்டமணியுடன் சேர்ந்து நடிக்கும் போது, என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் தவித்தேன். உடனே கேமரா முன் இருந்து வெளியே வந்து விட்டேன். சிரிப்பு அடங்கிய பிறகு தான் நடிக்கவே தொடங்கினேன். இவருடைய நடிப்பு நம்மையும் அறியாமல் சிரிப்பை வரவழைத்து விடும். பல படங்களில் இதை நான் அனுபவித்து இருக்கிறேன். சில சமயங்களில் என்னால் கவுண்டமணியுடன் நடிக்கவே முடியாது என்றும் கிண்டலத்தேன்.” என அர்ஜூன் கூறினார்.
அர்ஜூன் மட்டுமல்ல மற்ற முன்னணி நடிகர்கள் கூட கவுண்டமணியுடன் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகளில் நிச்சயமாக சிரித்து இருப்பார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. காமெடியில் கலக்கிய கவுண்டமணி கடைசியாக 49-ஓ மற்றும் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ஆகிய படங்களில் நடித்திருந்தார்.