சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து தயாரிப்பாளராக மாறிய ‘ரெஜினா’ பட இசையமைப்பாளர்!

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து  தயாரிப்பாளராக மாறிய  ‘ரெஜினா’ பட இசையமைப்பாளர்!
Published on

யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெஜினா’.

நடிகை சுனைனா முதன்மை கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்தை மலையாள இயக்குநர் டொமின் டி’சில்வா இயக்கியுள்ளார். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார் சதீஷ் நாயர். ‘ரெஜினா’. திரைப்படம் கிரைம் த்ரில்லர் வகையினை சேர்ந்தது.

‘ரெஜினா’. திரைப்படம் வரும் ஜூன்-23ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தமிழகம் தாண்டி, ஆந்திரா, கேரளாவிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கேரளாவில் கொச்சியில் இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சதீஷ் நாயர், இயக்குனர் டொமின் டி’சில்வா, நாயகி சுனைனா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், மலையாள திரையுலகை சேர்ந்த கதாசிரியரும் இயக்குனரும் 90களில் டாக்குமென்டரி படங்களை இயக்கி தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றவருமான தயாரிப்பாளர் சதீஷ் நாயரின் அண்ணன் பிரதீப் நாயர் கலந்து கொண்டு வரவேற்புரை அளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், ‘சதீஷ் நாயரின் தந்தை ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். குடும்பம் ஒரு காலத்தில் வியாபாரத்தில் சரிவை சந்தித்து முடங்கியது. பின்னர் அவரது மகன் சதீஷ் நாயர் அந்த குடும்பத்தில் இருந்து தனது சொந்த முயற்சியால் புதிய வியாபாரத்தை துவங்கி இன்று உலகெங்கிலும் தனது வியாபாரத்தினை விரிவுபடுத்தி மிகப்பெரிய தொழிலதிபராக உயர்ந்துள்ளார்.

சதீஷ் நாயர் இயல்பாகவே இசையில் ஆர்வம் கொண்டவர் தமிழில் மியூசிக் ஆல்பம் ஒன்றினை உருவாக்கினார். பின்னர் இப்போது பட தயாரிப்பிலும் இறங்கியுள்ளார். அவர் நினைத்திருந்தால் மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் தயாரித்திருக்கலாம். ஆனாலும் அவர் விருப்பப்பட்ட ஒரு ஸ்டைலில் "ரெஜினா" என்ற திரைப் படத்தினை எடுத்து ரிலீஸ் செய்கிறார். "ரெஜினா" திரைப்படம் மிகப்பெரிய வெற்றியினை பெற வாழ்த்துகிறேன் என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com