கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி வரும் ‘ரெஜினா’ !

Regina Sunaina
Regina Sunaina

நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடித்து வரும் படமான ‘ரெஜினா’, கிரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. மலையாளத்தில் சில கவனிக்கத் தக்க படங்களை இயக்கியுள்ள இயக்குனர் டொமின் டி’ சில்வா தமிழில் இயக்கும் முதல் திரைப்படம்.

யெல்லோ பியர் புரொடக்சன்ஸ் சார்பில் சதீஷ் நாயர் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார்.

சித் ஸ்ரீராம், சின்மயி, வைக்கம் விஜயலட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திர பாடகர்களுடன் நடிகை ரம்யா நம்பீசனும் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். ரெஜினா படத்தின் இசை உரிமையை டைம்ஸ் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தற்போது இதன் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் நாளை ரெஜினா படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற இருக்கிறது.

இதில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட போலீஸ் கமிஷனர் திரு. வி. பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் கலந்து கொள்கிறார். மேலும் கவுரவ விருந்தினர்களாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சேர்மன் திரு. எம்.கிருஷ்ணன், ஸ்ரீ பாபா தியேட்டர்ஸ் மேனேஜிங் டைரக்டர் திரு. எஸ்.பாலசுப்பிரமணியன் மற்றும் சிறப்பு பிரபல விருந்தினராக தன்னம்பிக்கை பேச்சாளரும் சன் டிவி ‘பிட்னஸ் குரு’வுமான டாக்டர் ஜெயா மகேஷ் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

இந்தப்படத்திற்கு பவன் K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் எடிட்டிங் செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் மேற்கொள்கிறார்.

பன்மொழி படமாக தமிழில் தயாராகியுள்ள ‘ரெஜினா’ இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியிடப் பட உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com