ஓடிடி தளத்தில் அன்னப்பூரணி படம் நீக்கியதற்கு இயக்குநர் வெற்றிமாறன் கண்டனம்!

Annapoorani OTT
Annapoorani OTT

த உணர்வை புண்படுத்துவதாக எழுந்த புகாரையடுத்து, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து நயன்தாராவின் அன்னபூரணி படம் நீக்கப்பட்டதற்கு இயக்குநர் வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அன்னபூரணி படத்தில் பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் எப்படி அசைவம் சமைக்கலாம் என்று படம் வெளியான போது சர்ச்சையானது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அன்னபூரணி இந்தி மொழியில் வெளியான நிலையில் சிவசேனா மற்றும் பஜ்ரங்தள் நிர்வாகிகள் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்து பிராமணப் பெண்ணான நயன்தாரா புர்கா அணிந்து நமாஸ் செய்தபின் அசைவம் சமைக்கும் காட்சிக்கும், ஜெய் நயன்தாராவிடம் ராமர் புலால் உண்டார் என்று சொல்லும் காட்சிக்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்துக்களின் மதஉணர்வை இந்தக் காட்சிகள் புண்படுத்துவதாகவும், லவ் ஜிகாத்தை படம் ஊக்குவிப்பதாகவும் எதிர்ப்பு கிளம்பியது. உத்திரபிரதேசம் மற்றும் மும்பை காவல் நிலையங்களில் புகார் தரப்பட்டது. கடுமையான எதிர்ப்பைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தனது தளத்திலிருந்து அன்னபூரணி படத்தை நீக்கப்படுவதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வெற்றிமாறன்
வெற்றிமாறன்

இதனையடுத்து, தற்போது இயக்குநர் வெற்றிமாறன் அன்னப்பூரணி திரைப்படம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டதற்காக கன்டணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,” தணிக்கை குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை புற அழுத்தங்களால் OTT யில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது என கூறி இருக்கிறார். மேலும் ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கை குழுவுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com