ரீங்காரமிடும் ரிஹானாவின் பாடல்கள் - Now Trending!

Rihanna
Rihanna

ரிஹானா உலகின் மிகவும் பிரபலமான சூப்பர் ஸ்டார் பாப் பாடகியாவார். அவரின் வசீகரிக்கும் குரலாலும், ஆடை அலங்கரிப்பாலும் உலகம் முழுவதிலுமுள்ள வெகுவான மக்களை கவர்ந்திழுத்தவர்.

2019ஆம் ஆண்டு அவர் சொந்தமாக உருவாக்கிய பேஷன் பிரான்ட், ஃ பென்டி(Fenty) ஆகும்.

2023ஆம் ஆண்டு பிளேக் பேந்தர் வகாண்டா ஃபார் எவர்(Black Panther: Wakanda Forever) இசைக்காக அகாடமி அவார்டுக்கு நாமினேட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி ரிஹானாவின் சொத்து மதிப்பு 1.7 பில்லியன் டாலர்களாகும்.

ரிஹானாவின் முதல் பாடல் 2005 ல் வெளியான, Pon de Replay என்னும் பாடலேயாகும். அப்பாடலே அவரை உலக மக்கள் திரும்பி பார்க்கும்படி செய்தது என்று சொல்லலாம்.

2012 ல் வெளியான ரிஹானாவின் ஆல்பமான Unapologetic ல் வரும் Diamond என்னும் பாடல் உலக பிரசித்தி பெற்றது.

ரிஹானாவின் Umbrella பாடலுக்கு ஸ்பைடர் மேன் திரைப்படத்தின் ஹீரோவான Tom holland 2017ல் நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.

ரிஹானாவின் டாப் 10 பாடல்கள்:

  1. We found love 2011.

  2. Umbrella 2007.

  3. Diamond 2012.

  4. Only girl in the world 2010.

  5. Pon de Replay 2005.

  6. Love on the brain 2016.

  7. Love the way you lie 2010.

  8. Disturbia.

  9. Stay 2012.

  10. Fourfivesecond 2015.

Rihanna singing
Rihanna singing

சமீபத்தில் ரிஹானாவும் அவரது பாடல்களும் பேசுப் பொருளானதற்கு காரணம், இந்திய பணக்காரரான அனில்அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானியும், அவரின் காதலியுமான ராதிகா மெர்சென்ட் அவர்களின் திருமணத்தை முன்னிட்டு நடக்க போகும் விழாவில் அவர் பாட இருப்பதாகத் தகவல்கள் வந்திருப்பதேயாகும்.

இதையும் படியுங்கள்:
3 மணிக்கு மேல், 3 ஊழியர்களுக்கு, 30 டாலர்கள் கொடுக்கும் நிறுவனம்.. ஏன்?
Rihanna

இவ்விழாவில் கலந்து கொள்ளவிருக்கும் 1200 விருந்தினர்கள் ஹாலிவுட், பாலிவுட், பில்லினியர் என்று அனைவரும் மிக முக்கியமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பில் கேட்ஸ், மார்க் ஷூகர்பர்க், சச்சின் டென்டூல்கர், சாருக்கான், சுந்தர் பிச்சை போன்றோர் விருந்தினர் பட்டியலில் உள்ளார்கள். பாடுவதற்காக ரிஹானா வாங்கிய கணிசமான தொகை 74 கோடியாகும்.

இந்த நிகழ்ச்சியில் ரிஹானா தன்னுடைய மிகவும் பிரபலமான பாடலான, Diamond, All of the lights, We found love in a hopeless place போன்ற பாடல்களை பாடவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வில் இதற்கு முன்பு ஈஷா அம்பானியின் திருமணத்தில் பியான்சே(Beyonce) பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அவர் அப்போது பெற்ற தொகை 33 கோடியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com