வெளியானது ஆர்.ஜே.பாலஜியின் Singapore Saloon - Trailer ட்ரைலர்!

Singapore Saloon - Trailer
Singapore Saloon - Trailer

`இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா` படத்தின் இயக்குனர் கோகுல் தற்போது சிங்கப்பூர் சலூன் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி நடித்த இந்த படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.

ஆர்.ஜே வாக பணிப்புரிந்து நடிப்பில் களமிறங்கிய பாலாஜி பல வெற்றிப்படங்களைக் கொடுத்துள்ளார். இவர் நடித்து வெளியான எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விஷேசம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதனையடுத்து இப்போது ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரைலரும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

எப்போதும் நகைச்சுவையாக நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் `ரன் பேபி ரன்` என்ற த்ரில்லர் படத்தில் நடித்தார். அது அவ்வளவாக ஹிட் கொடுக்கவில்லை. இப்போது இந்த சிங்கப்பூர் சலூன் படம் ஒரு ஊக்கும் தரும் படமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த படத்தின் ட்ரைலரில் இன்ஜினியரிங் படித்து முடித்த ஹீரோ முடித்திருத்தும் பணியில் நிபுணராக வேண்டுமென்று விரும்புகிறான். அதற்கு எவ்வளவு போராட்டங்களை எதிர்கொள்கிறான் என்பதே கதையாக இருக்கும் என ட்ரைலர் மூலம் யூகிக்க முடிகிறது.

சிங்கப்பூர் சலூன் படத்தின் கதையும் வசனமும் இரு பலங்களாக உள்ளன. முடிவெட்டுவது எல்லாம் குல தொழில்... ``நமக்கு எப்படி செட் ஆகும்?`` என்று தலைவாசல் விஜய் கேட்பதற்கு ஆர்.ஜே.பாலாஜி `` இன்ஜினியர் மட்டும் என்ன நம்ம குல தொழிலா`` என்று கேட்பது போன்ற வசனம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மேலும் ஆர்.ஜே.பாலாஜியின் `` நம்மல மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் Success is not an option, ‘must’ `` என்ற வசனமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இன்னொரு காரணத்தினால் தமிழ் மக்கள் அனைவருமே அப்படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பை வைத்துவிட்டனர். ஏனெனில் ட்ரைலர் மூலம் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அப்படத்தில் ஒரு கேமியோ ரோல் நடித்தது உறுதியானது. லோகேஷ் கனகராஜை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பது பல இயக்குனர்களின் கனவாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையின் 12 முக்கியமான சிறப்புகளை தெரிந்துக்கொள்வோம்!
Singapore Saloon - Trailer

அந்தவகையில் இயக்குனர் கோகுல் அதற்கான தொடக்கப் புள்ளியை வைத்துவிட்டார். மேலும் நடிகர் ஜீவாவும் ஒரு கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்தில் சத்யராஜ், மீனாட்சி சவுத்ரி, லால், ரோபோசங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை வேல்ஸ் இன்டர்னேஷ்னல் நிறுவனம் தயாரித்துள்ளது.சிங்கப்பூர் சலூன் படம் வரும் 25ம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com