ருத்ரன் இசை வெளியீட்டு விழா! பல ஏழை குழந்தைகளை படிக்க வைக்க உதவிய நடிகர் ராகவா லாரன்ஸ்!

ருத்ரன் இசை வெளியீட்டு விழா!  பல ஏழை குழந்தைகளை படிக்க வைக்க உதவிய   நடிகர் ராகவா லாரன்ஸ்!

ருத்ரன் இசை வெளியீட்டு விழாவில் கலக்கப் போவது யாரு பாலா அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் நன்கொடையை நடிகர் ராகவா லாரன்ஸ் தனது தாயார் கையால் வழங்கியுள்ளார்.

ஈகை குணம் அதிகம் கொண்ட ராகவா லாரன்ஸ் ஏற்கனவே அவரது தாயார் பெயரில் அறக்கட்டளை ஒன்று நடத்தி மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்து வருகிறார். அவரால் உதவி பெற்றவர்கள் முன்னேறியவர்கள் மிக அதிகம் பேர் .

தற்போது நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள , ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கியுள்ள ருத்ரன் திரைப்படத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. மேலும் இப்படத்தின் வீடியோவையும் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. இதில் 3000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குனர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கலக்கப் போவது யாரு , நிகழ்ச்சியில் பிரபலமான பாலா பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இதனை அறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ் இசை வெளியீட்டு மேடையில் அவரது தாயார் கையில் பாலாவிற்கு ரூ. 10 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com