"மனசு வலிக்குது" தொடர் வதந்திகளால் மனமுடைந்த பாடகி சைந்தவி.. வைரலாகும் போஸ்ட்!

saindhavi
saindhavi

சமூக வலைதளங்களில் தலைப்பு செய்திகளாக இருக்கும் ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து பிரச்சனை குறித்து பாடகி சைந்தவியே மனம் திறந்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்ய போகும் சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ்கு மார் 10ஆம் வகுப்பு முதலே பாடகி சைந்தவியை காதலித்து வந்துள்ளார். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்த பிறகு கடந்த 2013-ம் ஆண்டு பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் அன்வி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்த ஜோடி தான் ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி. திருமணமான 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது இருவரும் மனமுன்வந்து பிரிவதாக அறிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் பெஸ்ட் Pair என்ற பெயர் எடுத்திருப்பதால், ரசிகர்கள் யாராலும் அதை ஏற்று கொள்ள முடியாமல் சமூக வலைதளங்களில் குமுறி வருகின்றனர். நீண்ட யோசனைக்குப் பிறகு சைந்தவியும் நானும் திருமணமாகி 11 வருடங்கள் கழித்து, ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையைக் காத்துக்கொண்டு, எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்தோம் என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்,.

இருவரும் ஒருவருக்கொருவர் முடிவு செய்து பிரிந்த நிலையில், சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வதந்திகள் பரவி வந்து கொண்டிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது பாடகி சைந்தவி தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பல யூடியூப் வீடியோக்கள், குறிப்பாக நாங்கள் தனியுரிமை கோரிய பிறகு, அவர்கள் பெற்ற செய்திகளைப் பற்றிய கதைகளை உருவாக்குவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. எங்களுடைய விவாகரத்து முடிவு எங்கள் முன்னேற்றத்திற்காக நாங்கள் இருவரும் பரஸ்பரம் எடுத்ததாகும். ஜி.வி.பிரகாஷும் நானும் பள்ளிப் பருவத்தில் இருந்து 24 வருடங்களாகப் பழகுகிறோம், அந்த நட்பை தொடர்ந்து பேணுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com