SALAAR
SALAAR

விமர்சனம் SALAAR!

சலார் -1 ஒன்லி பில்டப்!(2 / 5)

"சில கதைகளை கேட்டால் பயமா இருக்கும், சில கதைகளை பார்த்தா பயமா இருக்கும். ஆனா இந்த கதையை நினைசாலே பயமா இருக்கும் என்ற பல பில்டப் வசனங்களை கொண்டதாக வந்துள்ளது சலார் திரைப்படம். 

இந்தியாவின்  எந்த சட்ட திட்டங்களும்  நுழைய முடியாத  இடமாக கன்சார் ராஜ்ஜியம் உள்ளது. இங்கே உள்ள அதிகார போட்டியை சமாளிக்கவும், எதிரிகளை வீழ்த்தவும் தனது  பால்ய கால நண்பனை அழைத்து வருகிறார் இளவரசன். நண்பன் ஆடும் ஆட்டம்தான் சலார். சாலார் என்றால் மன்னன் கேட்பது எல்லாம் தருபவர் என்று அர்த்தம்.  KGF 2 படம் முடிந்து செட்டிங்கை மாற்றாமல் அப்படியே சலார் படத்திற்க்கு  பிரசாந்த் நீல் பயன்படுத்தி கொண்டு விட்டார் போன்று தோன்றுகிறது.

ஆர்ட் டைரக்ஷன் அப்படியே KGF படம் போலவே உள்ளது. சரி படம் உருவாக்கிய விதத்தில் ஏதேனும் புதுமை உள்ளதா என்றால் இதுவும் இல்லை.KGF  போலவே ஹீரோவுக்கு பேஸ் வாஸில்  யாரவது ஒருவர் பில்டப் தந்து கொண்டிருக்கிறார். KGF  போன்று நிலமும், மனிதர்களும் கறுப்பாகவே இருக்கிறார்கள்.எக்ஸ்ட்ராவாக ஆண்கள் மூக்கில் வளையம் அணிந்து கொண்டிருக்கிறார்கள்.  படம் முழுவதும்  வெட்டும் குத்தும் நீக்கமற நிறைந்துள்ளது. நம் முகத்திலேயே ரத்தம் தெறிபது போல உள்ளது.

ஹீரோவை  எப்படியும் கொல்ல முடியாது என்று நமக்கு முன்பே தெரிந்து விடுவதால் நமக்கு எந்த வித சுவா ரசியமும் வரவில்லை.ஒரே குத்தில் பந்தாடுவது, ஒரே  வெட்டில் சாய்ப்பது என பிரபாஸை இன்னும்  எத்தனை படத்தில் பார்ப்பது? ஆக்ஷனில் காட்டிய ஆர்வத்தை        ஆக்ட்டிங்கில் பிரபாஸ் காட்டவில்லைபிரிதிவிராஜ், சுருதிஹாசன், ஜான் விஜய் என பல நடிகர்கள் நடித்திருந்தாலும் ஓரளவு  நடிப்பில் ஈர்ப்பது ஸ்ரேயா ரெட்டிதான்.

 படத்தின் ரசிக்கும் படியான ஒரே விஷயம் புவன் கௌடாவின் ஒளிப்பதிவுதான். லைட்டிங் மற்றும் கோண ங்கள்  ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை வெறும் கத்தலாக மட்டுமே உள்ளது. சலார் படத்திற்க்கு இரண்டாம் பகுதி இருப்பதாக கடைசியில் லீட் தருகிறார்கள். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு டைரக்டர் சார்.                                            

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com