
கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் என்று அழைக்கப்படும் ரொனால்டோவும், இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான் கானும் குத்துச்சண்டை போட்டியின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
உலகம் முழுவதும் அறியப்படும் பிரபலங்களில் ஒருவரான கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் ரொனால்டோ மற்றும் இந்தி சூப்பர் ஸ்டார் சல்மான்கான் இருவரும் சவுதி அரேபியா நாட்டின் ரியாத் நகரில் நடைபெற்ற குத்து சண்டை போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
ரியாத் நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் டபிள்யு டபிள்யு இ போட்டியினுடைய முன்னணி போட்டியாளர்கள் பலரும் கலந்துகொண்டு சண்டையிட்டனர். இந்த போட்டியை காண நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் ரொனால்டோவிற்கும் , நடிகர் சல்மான் கானிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பை ஏற்று இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துச்சண்டை போட்டியை பார்த்தனர்.
இந்த குத்துச்சண்டை போட்டியை காண தனது மனைவியுடன் வந்திருந்த ரொனால்டோ நடிகர் சல்மான் கானை கண்டு காணாமல் சென்று விட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகி வைரலானது.
இந்த நிலையில் நடிகர் சல்மான் கான் கால்பந்து வீரர் ரொனால்டோ உடன் சிரித்து பேசுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு சமூக ஊடகங்களில் வெளியான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இப்புகைப்படம் சல்மான்கான் ரசிகர்களால் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.