'சாகுந்தலம்' புரமோஷன் நிகழ்ச்சியில் டென்ஷனான சமந்தா!

'சாகுந்தலம்' புரமோஷன் நிகழ்ச்சியில் டென்ஷனான சமந்தா!
Updated on

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் தற்போது 'சாகுந்தலம்' திரைப்படம் தயாராகி உள்ளது.

புராணக் கதையான 'சாகுந்தலம்' திரைக் காவியத்தில் சாகுந்தலை கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார். துஷ்யந்தனாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்திருக்கிறார். இப்படத்தில் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், மோகன்பாபு, மதுபாலா, கபீர் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

'ருத்ரமா தேவி' படத்தை இயக்கிய இயக்குநர் குணசேகரன் இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், வருகிற ஏப்ரல் 14-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் புரமோஷன் வேலைகள் தற்போது நடந்து வரும் நிலையில், நடிகை சமந்தா இதற்கான புரமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார். இது சம்பந்தமாக அவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வருகிறார்.

இதைத்தொடர்ந்து, சமீபத்தில் மும்பையில் 'சாகுந்தலம்' படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அதில் நடிகை சமந்தாவும் கலந்துகொண்டார்.

அப்போது அங்கு வந்திருந்த புகைப்படக்காரர்கள் நடிகை சமந்தாவை சுற்றி வளைத்தனர். புகைப்படக்காரர்களும் பிளாஷ் போட்டு நடிகை சமந்தாவை புகைப்படம் எடுத்த நிலையில், மிகவும் அப்செட் ஆகிய சமந்தா, கண்களை மூடிக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

போட்டோகிராபர்களின் இந்த செயலால், மனமடைந்த சமந்தாவின் ரசிகர்கள், இப்படி பிளாஷ் போட்டால் அவர் கண்ணுக்கு பாதிப்பு வராதா? என்கிற ரீதியில் கமெண்ட் செய்து வருத்தத்தைக் கொட்டி வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com