சானியா மிர்சா சோயப் மாலிக்கை பிரிகிறாரா? வதந்திகளுக்கு சோயப் மாலிக் முற்றுப்புள்ளி?

சானியா மிர்சா - சோயிப் மாலிக்
சானியா மிர்சா - சோயிப் மாலிக்

சானியா மிர்சா, சோயப் மாலிக் தம்பதியின் விவாகரத்து வதந்திகளுக்கு சோயப் மாலிக் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக் அவர்களை திருமணம் செய்தது அனைவரும் அறிந்ததே. இருவரும் காதலித்து மணம் புரிந்தனர் . இந்த ஜோடி தற்போது விவாகரத்து செய்துக்கொள்ள போவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சோயப்மாலிக் தனக்கு துரோகம் செய்து விட்டதாக சானியா தனது நெருங்கிய வட்டாரங்களில் சொல்லி வருவதாக தகவல்கள் வெளியானது.

சானியா மிர்சா
சானியா மிர்சா

இந்த ஜோடி தற்போது முறைப்படி விவாகரத்து செய்துவிட்டதாக கிரிக்கெட் வீரருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது. சானியா மிர்சா கடந்த சிலநாட்களாக இந்தியாவில் வசித்து வருகிறார். அவர்களுக்கு இஷான் என்ற மகன் உள்ளார்.

அவர்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர். அதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும்" என்று பாகிஸ்தானில் உள்ள மாலிக்கின் நிர்வாகக் குழுவில் இருந்த ஒருவர் உறுதிப்படுத்தினார்.

சோயப் தனக்கு துரோகம் செய்து ஏமாற்றியதை சானியா கண்டுபிடித்ததை தொடர்ந்து இது நடந்துள்ளது. அப்போது தான் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். இருப்பினும், அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் மகன் இஷானுக்கு பெற்றோராக இருப்பார்கள்.

சோயிப் தனது இன்ஸ்டாவில் "நீங்கள் பிறந்தவுடன், நாங்கள் மிகவும் அடக்கமாகிவிட்டோம், வாழ்க்கை எங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்தில் இருவரும் தங்கள் மகனின் பிறந்த நாளை ஒன்றாக கொண்டாடினர் சோயிப் இன்ஸ்டாகிராமில் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டாலும், சானியா வெளியிடவில்லை.

சானியா மிர்சா, சோயப் மாலிக் ஜோடி விவாகரத்து பெற்றுவிட்டதாக பரபரப்பாக தகவல் பரவிய நிலையில் பாகிஸ்தான் தொலைகாட்சி ஒன்றில் மிர்சா மாலிக் என்ற நிகழ்ச்சியை இருவரும் இணைந்து தொகுத்து வழங்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியானது. இருவரும் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதனை தவிர இன்று 36வது பிறந்தநாள் கொண்டாடும் சானியா மிர்சாவுக்கு சோயப் மாலிக் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து கூறியுள்ளார். இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஷோயப் மாலிக், பிறந்தநாள் வாழ்த்துக்கள் சானியா மிர்சா ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துக்கள். சானியா பிறந்தநாளான இன்று மகிழ்ந்திருக்குமாறு வாழ்த்தியுள்ளார்.

இதன் மூலம் சானியா மிர்சா, சோயப் மாலிக் தம்பதியின் விவாகரத்து வதந்திகளுக்கு சோயப் மாலிக் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக இருநாட்டு ரசிகர்களும் தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com