'சரண்யா அம்மா கொஞ்சம் வாங்கம்மா ' !

Saranya
Saranya

தமிழ் சினிமாவில் மனோரமாவிற்கு பிறகு சிறந்த குணசித்திர நடிகை என்று பெயர் பெற்றிருப்பவர் சரண்யா பொன்வண்ணன். பிரபல முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்துக்கொண்டுருக்கிறார். சமீபத்தில் ஒரு சிறு பட தயாரிப்பாளர் தன் படத்தில் நடித்த சரண்யாவை படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக அழைத்துள்ளார்.

saranya
saranya

ஆனால் கிறிஸ்மஸ் நிகழ்ச்சி உள்ளதால் தன்னால் வர முடியாது என சரண்யா மறுத்துள்ளார். ப்ரோமோஷன் விழாவில் சரண்யா வராததை குறிப்பிட்டு பேசிய தயாரிப்பாளர் சரண்யா அவர்கள் பெரிய ஹீரோ படம் என்றால் இப்படி வராமல் இருப்பார்களா? என்னை போன்ற சிறு தயாரிப்பாளர்கள் படங்களுக்கு சீனியர் ஆர்ட்டிஸ்ட் வந்தால்தான் படம் கவனம் பெறும்.

சரண்யா போன்றவர்கள் வராதது தவறு என்று வருத்தத்துடன் பேசியுள்ளார். தயாரிப்பாளர் இப்படி பேசியது தயாரிப்பாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்பாடுத்தியுள்ளது. 'சரண்யா அம்மா கொஞ்சம் வாங்கம்மா 'என்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com