நெருங்கும் வரலட்சுமி திருமணம்... ரஜினியை தொடர்ந்து முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்த சரத்குமார் - ராதிகா!

Sarathkumar Invite the CM
Sarathkumar Invite the CM

திருமண வேலையை தொடங்கியுள்ள சரத்குமார் குடும்பத்தினர் முதலமைச்சரை நேரில் சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

முன்னணி நடிகராக வலம் வரும் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தனது அடுத்தகட்ட வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கவுள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான 'போடா போடி' படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும், வரலட்சுமிக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. தமிழ்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், மற்ற மொழி படங்களில் நடித்து வந்தார்.

தொடர்ந்து அடுத்தடுத்து போல்ட் கதாபாத்திரங்களை எடுத்து நடித்து அசத்தி வந்தார். இவருக்கான வில்லி கதாபாத்திரம் பக்காவாக பொருந்த அனைத்து மொழி படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், 14 வருடங்கள் பழகிய நண்பரும், தொழிலதிபரான நிக்கோலய் சச்தேவ் என்பவரை தான் கரம்பிடிக்கவுள்ளார். இவர்களின் நிச்சயதாரத்தம் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் திருமண நாள் நெருங்கி கொண்டிருக்கிறது.

நிகோலாய் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவராக இருந்தாலும் அவர் மீதுள்ள காதலால் அவருக்கு இரண்டாவது மனைவியாக சம்மதித்து உள்ளார் வரலட்சுமி. இந்த ஜோடிக்கு ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இவர்களது திருமணத்தை தாய்லாந்தில் நடத்த திட்டமிட்டு இருந்தாலும், அதன் பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்த உள்ளனர்.

இதையும் படியுங்கள்:
கங்கனா ரனாவத் கன்னத்தில் பளார் விட்ட போலீஸ்... சர்ச்சைக்கு பின் பிரபலங்களின் கருத்து!
Sarathkumar Invite the CM

திருமண வேலைகளில் சரத்குமார் குடும்பமே பிசியாக உள்ளது. குறிப்பாக அழைப்பிதழ் கொடுக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், எம்.பி கனிமொழி போன்ற பிரபலங்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வைத்த புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி வைரலாகின. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார் சரத்குமார். வரலட்சுமி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com