சர்வதேச சவுண்ட் பியூச்சர் விருது: ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் இசை ஆல்பம் வென்றது!

சர்வதேச சவுண்ட் பியூச்சர் விருது: ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் இசை ஆல்பம் வென்றது!
Published on

ஆஸ்கர் விருது வென்ற இசை அமைப்பாளர் .ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான். இவர் தயாரித்த பரிஸ்டான் என்ற அனிமேஷன் இசை ஆல்பத்திற்கு சர்வதேச சவுண்ட் பியூச்சர் என்ற விருது கிடைத்துள்ளது.

இதுகுறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

என் மகள் கதீஜா தயாரித்த பரிஸ்டான் என்ற அனிமேஷன் இசை ஆல்பம், அமல் என்ற ஒரு முஸ்லிம் சிறுமியின் சிறு பயணத்தை அடிப்படையாக கொண்டது இந்த ஆல்பத்துக்கு சர்வதேச சவுண்ட் பியூச்சர் என்ற விருது கிடைத்துள்ளது. இது சிறந்த அனிமேஷன் மியூசிக் ஆல்பத்திற்கான விருதாகும்.

இவ்வாறு மகிழ்ச்சியுடன் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து கதீஜா ரகுமான் கூறியிருப்பதாவது:

நான் சென்னையில் பல்வேறு வகையான இசை மற்றும் பலதரப்பட்ட நண்பர்களுடன் பன்முக கலாச்சார குடும்பத்தில் வளர்ந்தேன். வாழ்க்கையின் அதிசயங்கள் எப்போதும் என்னை ஈர்க்கிறது. இந்த வீடியோவின் முக்கிய கதாபாத்திரமான அமல், என்னுடைய இத்தகைய அனுபவங்கள், மற்றும் அறியத் துடிக்கும் ஆர்வம் ஆகியவற்றின் வெளிப்பாடு என்று சொல்லலாம்.

இவ்வாறு கதீஜா ரஹ்மான் தெரிவித்துள்ளார். இந்த இசை ஆல்பம் ஏற்கெனவே குளோபல் ஷார்ட்ஸ் மியூசிக் விருதும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com