இயக்குனர் சீனு ராமசாமி யின் 'கண்ணே கலைமானே' படத்திற்கு 3 சர்வதேச விருதுகள்.. குவியும் பாராட்டு!

கண்ணே கலைமானே
கண்ணே கலைமானேIntel

நடிகர் உதயநிதி அரசியலில் குதித்ததால் மாமன்னன் படத்துடன் சினிமாவில் நடிக்கபோவதில்லை என அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மாமன்னன் திரைப்படம் தற்போது வெற்றியடைந்துள்ளது. இதனால் உதயநிதிக்கு பலரும் பாராட்டுக்களை அள்ளி கொட்டி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணே கலைமானே படத்திற்கு தற்போது 3 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான 'கண்ணே கலைமானே' இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றது.

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து நாயகனாக நடித்து கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'கண்ணே கலைமானே' திரைப்படம் மனதைத் தொடும் வகையில் மனிதம் பேசியதற்காக பெரிதும் பாராட்டுகளை பெற்றது. இந்தத் திரைப்படம் தற்போது சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இந்தோ-பிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மொத்தம் மூன்று விருதுகளை 'கண்ணே கலைமானே' குவித்து சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் 'கண்ணே கலைமானே' திரைப்படத்திற்காக இந்தோ-பிரெஞ்சு சர்வதேச பன்னாட்டு விழாவில் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை உதயநிதி ஸ்டாலினும், சிறந்த நடிகைக்கான விருதை தமன்னாவும், சிறந்த துணை நடிகைக்கான விருதை வடிவுக்கரசியும் வென்றுள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com