
இயக்குனராக இருந்து நடிகராக மாறிய செல்வராகவன் தெலுங்கு திரை உலகிலும் அறிமுகமாக உள்ளார்.
செல்வராகவன் தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.மேலும் தனது சகோதரர் தனுஷினுடைய ஆரம்ப கால வளர்ச்சியில் செல்வராகவனுடைய பங்கு அதிகம் இருக்கிறது. இதற்காக தனது சகோதரர் தனுஷை வைத்து செல்வராகவன் பல படங்களை இயக்கியுள்ளார்.
துள்ளுவதோ இளமை படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான செல்வராகவன். காதல் கொண்டேன், மயக்கம் என்ன, புதுப்பேட்டை போன்ற படங்கள் மூலம் பெயர் பெற்றவர். கடைசியாக நானே வருவேன் என்ற படத்தை இயக்கினார். தற்போது படங்களில் நடிப்பதிலும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார் செல்வராகவன்.
பகாசூரன், பர்ஹானா ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்திருந்தார். இந்த நிலையில் தெலுங்கின் முன்னணி இயக்குனர்களின் ஒருவரான கோபிசந்த் மாலினேனி இயக்கத்தில் ரவி தேஜா நடிக்கும் படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்தப் படத்தில் மூலம் செல்வராகவன் தெலுங்கு திரை உலகிற்கு அறிமுகம் ஆகிறார். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். தன்னுடைய சிறந்த நடிப்பினால் தமிழில் முன்னணி நடிகராக மாறி இருக்கும் செல்வராகவன், தெலுங்கு திரை உலகில் எந்த அளவிற்கு கால் பதிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.