சீரியல் நடிகை கல்யாணிக்கு என்ன ஆச்சு? அவரே போட்ட பதிவு.. ரசிகர்கள் ஆறுதல்!

நடிகை கல்யாணி
நடிகை கல்யாணிIntel
Updated on

சீரியல் நடிகை கல்யாணி தன்னுடைய உடல்நிலை குறித்து இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.

அள்ளி தந்த வானம் படத்தில் பிரபுதேவாவுடன் சேர்ந்து நடித்த குழந்தைதான் நடிகை கல்யாணி. சின்ன பட்டணம் பாடல் பட்டி தொட்டி எல்லாம் பரவ சிறு வயதிலேயே நடிப்பின் திறமையை வெளிகாட்டி அசத்தினார், தொடர்ந்து ஜெயம் படத்தில் நடிகை சதாவிற்கு தங்கையாக நடித்து அசத்தியிருப்பார்.

தொடர்ந்து சில படங்கள், சீரியல்களில் நடித்து வந்தார், சமூக வலைதளங்களில் மிக ஆக்டிவான இவர் சமீபத்தில் எந்த ஒரு வலைதளங்களிலும் வருவதில்லை. இதனால் இவரது ரசிகர்கள் எங்கே போனீர்கள் என்றெல்லாம் அன்பு தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் ரசிகர்களின் கேள்விகளுக்கும், அன்புக்கும் பதிலளிக்கும் வகையில், அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார்.

அதில், "உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் நான் மிக சோர்வாக உள்ளேன். கடந்த 2016 ஆம் ஆண்டு எனக்கு முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை நடந்தது. சிறிது காலம் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு எனக்கு நவ்யா பிறந்தாள். இதனையடுத்து கடந்த ஆறு மாதத்துக்கு முன்பாக மீண்டும் பிரச்சனை ஆரம்பித்ததும் மருத்துவரை சந்தித்தேன்.

நான் கேட்கக்கூடாத ஒன்றை அவரிடம் இருந்து கேட்டேன். ஏற்கனவே நான் செய்த அறுவை சிகிச்சை எனக்கு பலனளிக்கவில்லை. இதனால் என் உடலில் உள்ள பிளேட், ஸ்க்ரூவை நீக்கி புதிய எலும்பை வைக்க வேண்டும் என்று கூறினார். அதாவது வேறொருவரின் எலும்பை எனக்கு பயன்படுத்த வேண்டும். இந்த முறை நான் குணமாக நீண்ட காலம் எடுக்கும்.

என் கணவர் ரோகித் என் கையை இறுக்கமாக பிடித்து கொண்டார். என் 5 வயது மகள் நவ்யா தான் என்னை அதிகம் பார்த்து கொள்கிறார். என்மீது அவர் காட்டும் பாசத்தை என்னால் நம்பவே முடியவில்லை. எனக்காக நிற்கும் எனது குடும்பத்தினருக்காக நன்றி கடன் பட்டுள்ளேன்". இவ்வாறு உருக்கமாக ஒரு நீண்ட பதிவை பகிர்ந்துள்ளார் கல்யாணி. இதனையடுத்து அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com