
'கற்றது தமிழ்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, 'தங்க மீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' உட்பட 4 படங்கள் மட்டுமே அவர் இயக்கியிருந்தாலும், அனைத்து படங்களும் எதாவது ஒரு வகையில் விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது. அதனாலேயே ராம் இயக்கும் படங்கள் என்றாலே மிகுந்த எதிர்பார்ப்பும் இருக்கும்.
அந்தவகையில் அவர் அடுத்ததாக, 'ஏழு கடல் ஏழு மலை' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தை 'மாநாடு' பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் மலையாள நடிகரான நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் நடித்துள்ளனர்.
சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும், ராமேஸ்வரத்திலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து, இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்துவருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ள நிலையில், நடிகர் நிவின் பாலி, அஞ்சலி மற்றும் சூரி ஆகியோர் டப்பிங் பேசி முடித்துள்ளனர். இது சம்பந்தமாக வெளியாகியுள்ள வீடியோவில், நிவின் பாலியும், சூரியும் மிரட்டலான குரலில் டப்பிங் பேசியுள்ள நிலையில், அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.