பிரம்மாண்ட படங்களுக்கு பெயர்ப்போன ஷங்கர் தற்போது இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்தின் செகண்ட் பாடல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்டமாக படங்கள் எடுப்பதில் சிறந்தவர். ஒரு பாட்டுக்காக மட்டும் கோடி கணக்கில் செலவு செய்து எடுப்பவர். அதேபோல், தனது பாடல் காட்சிகளில் தனித்துவம் காட்ட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். அதற்கு ஒரு உதாரணம் நண்பன் படத்தில் வரும் அஸ்க்கு லஸ்க்கா பாடல். இந்த ஒரு பாடலில் வெவ்வேறு காலக்கட்டங்களில் இருக்கும் காதல்களை வேறுபடுத்தி காண்பித்திருப்பார். ராஜா காலத்து காதல், கிராமத்து காதல், மாடர்ன் காதல் என இதுபோன்ற வித்தியாசமான முறையில் பாடல்கள் எடுப்பார்.
இப்படி படங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ, அதேபோல்தான் பாடல்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்.
அந்தவகையில் ஜீன்ஸ் படத்தில் வரும் பூவுக்குள் ஒழிந்திருக்கும் பாடலில் ஏழு அதிசயங்களை விவரித்து காட்டப்பட்டிருக்கும். அதில் அந்த ஏழு அதிசயங்களையும் ஷங்கர் காட்சிப்படுத்திருப்பார்.
அந்தவகையில் தற்போது ஷங்கர் இயக்கி வரும் கேம் சேஞ்சர் படத்திலும் ஒரு வித்தியாசமான பாடல் இடம்பெற்றுள்ளது. தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சுனில், ஜெயராம், அஞ்சலி ஆகியோர் நடித்திருக்கின்றனர். கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் ராம் சரண் பிறந்தநாளில் வெளியானது.
இதனையடுத்து எப்படி ஜீன்ஸ் படத்தின் பாடலில் ஏழு அதிசயங்களைக் காட்டினாரோ அதேபோல் இந்த படத்திலும் ஷங்கர் 7 மாநிலங்களை பெருமைப்படுத்தும் விதமாகத்தான் இப்பாடலை இயக்கியுள்ளாராம். இந்தப் பாடலே தற்போது வெளியாகியுள்ளது.
எடுத்துக்காட்டாக கேரளாவில் செண்டை மேளம், இப்படி ஏழு மாநிலத்திற்கும் உள்ள பேமஸான இசையை போட்டு பாடலை கேம் சேஞ்சர் படத்திற்காக உருவாக்கி இருக்கிறார்.
இந்தப் பாடலில் மேக்கிங், ராம் சரண் நடனம் மற்றும் சில மாநிலங்களின் கலாச்சாரம் மட்டுமே காட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால், படம் மற்றும் வீடியோ பாடல் வெளியான பின்னரே முழு பாடலின் தனித்துவத்தை அறிந்துக்கொள்ள முடியும்.