ஷபீர் கல்லராக்கல் இன்னொரு விஜய்சேதுபதி?

Shabeer Kallarakkal
Shabeer Kallarakkal

கடந்த 2022 ஆம்ஆண்டுவெளியான  சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் கேரக்டரில் நடித்த ஷபீர் கல்லராக்கலை நாம் மறந்து விட முடியாது. நட்சத்திரம் நகர்கிறது, நெருங்கிவா, அடங்கமறு, பீஸ்ட், பேட்ட உட்பட பலதமிழ்படங்களில் நடித்துள்ளார் ஷபீர் மலையாளம், மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

சர்பட்டா பரம்பரை படத்திற்கு பின்பு தான் இவரை தமிழ் சினிமா அடையாளம் கண்டு கொண்டது.  ஷபீர் என்றால் கூட சிலருக்கு தெரியாது. சார்பட்டா பரம்பரைபடத்தில் இவர் நடித்த டான்சிங் ரோஸ் கேரக்டரை சொன்னால் பலருக்கு தெரியும். சென்ற ஆண்டு இவர் நடித்த கிங் ஆப் கொத்தா படத்திலும் இவர் நடிப்பு பாராட்டப்பட்டது. திரிஷா ஹீரோயினாக நடித்த, தி ரோட் படத்தில் ஒரு மாறுபட்ட வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார் ஷபீர்.

ஷபீர் தற்போது விஜய்சேதுபதி பாணியைப் பின்பற்றுகிறார் என்று சொல்லலாம். விஜய்சேதுபதி ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பார், மற்றொருபடத்தில் வில்லனாக நடிப்பார். கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே செலக்ட் செய்து நடிக்கிறார் விஜய்சேதுபதி. இதே போன்று ஹீரோ, வில்லன் என்பதெல்லாம் கிடையாது. கதையும் என் கேரக்டரும் தான் முக்கியம் என்று உணர்ந்துமாறு பட்டகதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் ஷபீர்.

இதையும் படியுங்கள்:
அமரன் சிவகார்த்திகேயன்... SK 21 பட அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்!
Shabeer Kallarakkal

தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம்தரும், ஹீரோயினை மையப்படுத்திய 'பர்த்மார்க்'  என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் ஷபீர். விக்ரம் ஸ்ரீதரன் இயக்கும் 'பர்த்மார்க்' படத்தின் தயாரிப்பாளரில் ஒருவரான விக்ரமன் ஸ்ரீதரன் சொன்ன ஒரு சுவாரசியமான சம்பவத்தின் அடிப்படையில் சிறிய கற்பனை சேர்த்து இப்படம் உருவாகியுள்ளது. தன்வந்திரி என்ற கிராமத்திற்கு இயற்கையான முறையில் சுகபிரசவம் செய்து கொள்ள பல கர்ப்பிணி பெண்கள் வருகிறார்கள். இங்கே ஒரு கணவனும் மனைவியும் சந்திக்கும் பிரச்சனைகள் பின்புலத்தில் இப்படம்உருவாகியுள்ளது. கணவனாக ஷபீர், மனைவியாக மிர்னாவும் நடித்துள்ளார்கள்.

தமிழக கேரள எல்லையில் மறையூர் அருகே ஒரு கிராமத்தை  தத்ரூபமாக உருவாக்கி உள்ளார்கள். ஒரு படமாகமட்டும் இல்லாமல் ஒரு வாழ்வியலாக இருக்கும் என்கிறார் இயக்குநர். ஷபீர் நடிப்பு படத்தில் பேசப்படும் என்கிறார் இயக்குநர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லை எனக்கு கதைதான் முக்கியம் என்று உணர்ந்து நடிக்கும் ஷபிர் போல் இன்றைய இளம் ஹீரோக்கள் யோசிக்க ஆரம்பித்தால் பல நல்ல சினிமாக்கள் தமிழில் வரவாய்ப்புள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com