‘ஜவான்’ படத்திற்காக ஷாருக் ஏற்ற சவால்!

பாலிவுட் பூமராங்!
‘ஜவான்’ படத்திற்காக ஷாருக் ஏற்ற சவால்!

சிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ‘ஜவானி’ல் அனிருத் இசையில் ‘ஜிந்தா பந்தா’ என்றும், தமிழில் ‘வந்த எடம்’ என்றும், தெலுங்கில் ‘தும்மே துலிபெலா’ என்றும் ஒரு பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்பாடலுக்காக 1,000 கலைஞர் களுடன் அசத்தலாக நடனமாடியுள்ளார் ஷாருக்கான். முதன் முறையாக மூன்று மொழிகளில் லிப்-சிங்க் கொடுத்தும் இருக்கிறார்!

தமிழ், தெலுங்கு பதிப்புக்களுக்கான பாடல் வரிகளை சிரமம் பாராமல் கற்றுக்கொண்டார். படப்பிடிப்பின்போது சென்னை யூனிட் அவருக்கு உதட்டசைவில் தமிழ் மொழி பேச கற்றுக்கொடுத்தது. இப்பாடல் காட்சியை, 3 மொழிகளுக்காக, மூன்று முறை படமாக்கினர். படப்பிடிப்பு 5 நாட்கள் நடந்தன.

‘ஜவான்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

டாப்ஸிக்கு ராசி இல்லையாம்!

ந்தியில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருக்கும் டாப்ஸி, ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவமளிக்கும் கதைகள் மற்றும் படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் ஏற்படாதது குறித்து டாப்ஸி அளித்துள்ள பேட்டியில்...

“நான் நடித்த சில தென்னிந்தியப் படங்கள் தோல்வியைச் சந்திக்க, அநேகர் என்னைக் கடுமையாக விமரிசித்தனர். அதிர்ஷ்டமில்லாதவள், இவள் நடித்த படம் ஹிட்டாகாது என்று என் காதுபடச் பேசினர்.

படங்கள் தோல்வியடைந்தால் ஹீரோயின் எப்படி காரணமாவார்? படங்களில் ஹீரோயின் வருவது சில காட்சிகள் மற்றும் ஓரிரு பாடல்களில் நடனமாடுவது மட்டுமே. உண்மை நிலை இப்படி இருக்க, ஹீரோயின் மீது பழி சுமத்துவது தவறு இல்லையா?

ஆரம்ப காலங்களில் வருத்தப்பட்டாலும், இப்போது எந்த விமர்சனம் பற்றியும் கவலைப்படுவதும், கண்டு கொள்வதும் அறவே கிடையாது. முன்னணியில் இருப்பது குறித்து மகிழ்வாக இருக்கிறன்” என்று கூறினார்

“ஷாருக்கானுடன் ஆட ஆசை!”

வ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆசை. இந்த நடிகைக்கு ஷாருக்கானுடன் இணைந்து நடனமாட வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசையாம்!

“எனது தந்தை சுரேஷ்குமார் மலையாளத்தில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர். சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். தாயார் மேனகா ஒரு சீனியர் நடிகை. அக்கா ரேவதி மும்பை ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் பணியாற்றியவர். பாட்டி சரோஜாவும் நடிகைதான்.

இவ்வளவு பெரிய சினிமா குடும்பத்திலிருந்து வந்த நான் நடிப்புத் தொழிலைத் தெய்வமாக நினைத்து மதிக்கிறேன். பேஷன் டிசைனிங் கோர்ஸ் படித்திருந்தாலும், சினிமா நடிகையாகிவிட்டதால் பிற வேலைகளில் ஈடுபட விரும்பவில்லை. மலையாளத்தில் சொந்தப் படமொன்று தயாரித்தேன். தமிழிலும் விரைவில் இயக்குவேன்.

எம்மொழிப் படத்தில் நடித்தாலும், அம்மொழியைக் கற்பதில் ஆர்வம் காட்டுவேன். திரையுலகம் எனக்கு அளித்திருக்கும் நல்ல அந்தஸ்தைக் கடைசி வரைக் காப்பாற்றிக் கொள்வேன்.

ஷாருக்கானுடன் இணைந்து நடனமாட வேண்டுமென்ற ஆசை எப்போது நிறைவேறுமெனத் தெரியவில்லை” என்று தன் ஆசையை வெளிப்படுத்துபவர் கீர்த்தி சுரேஷ்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com