DunkiReview
DunkiReview

விமர்சனம் Dunki!

Published on
டங்கி -எமோஷனல் மேஜிக், இது இந்தியாவின் முகம்.  (3.5 / 5)

விசா இல்லாமல் பிறநாடுகளிலும், நம் நாட்டிலும் இருக்கும் சிலர் கைது செய்யப்படுவதை நாம் அடிக்கடி மீடியாக்களில் பார்த்திருப்போம் இது போல விசா இல்லாமல் செல்பவர்களை பற்றி சொல்கிறது டங்கி.

டங்கி என்றால் எந்த வித உரிய ஆவணங்களும் இன்றி தவறான வழியில் ஒரு நாட்டிற்க்குள் நுழைபவர்கள் என்று அர்த்தம். சாருக்கான், டாப்ஸி நடித்துள்ள இப்படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்கி உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வெவ்வேறு குடும்பத்தில் வசிக்கும் சிலர் குடும்ப சூழல் காரணமாக வேலை தேடி லண்டன் செல்ல முயற்சி செய்கின்றனர். ஆனால் பலவேறு காரணங்களால் இவர்களுக்கு விசா மறுக்கப்படுகிறது.

இவர்கள் ஒன்று சேர்ந்து விசா இல்லாமல் திருட்டு தனமாக பல நாடுகள் கடந்து லண்டன் செல்கின்றனர். அங்கே இவர்கள் காவல் துறையினரிடம் மாட்டி கொள்கின்றனர். இதன் பின்பு நடக்கும் பிரச்சனைகளை சுற்றி படம் நகர்கிறது.

இதையும் படியுங்கள்:
விமர்சனம் சபா நாயகன்!
DunkiReview

ஊரில் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள், லண்டன் செல்ல ஆங்கிலம் கற்றுக் கொள்வது,  இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ்  தூதரகத்தில் பதில் சொல்ல முடியாமல் முழிப்பது என நகைசுவையாக நகரும் காட்சிகள் மெல்ல மெல்ல எமோஷனலாக மாறி நம்மை ஒன்ற செய்து விடுகிறது.   

பஞ்சாப்பில் இருந்து பாகிஸ்தான், இரான் வழியாக லண்டன் செல்லும் பயணம் ஒரு லைவ் உணர்வை தருகிறது.படம் நகரும் விதம் பார்வையாளர்களுக்கு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. படத்தின் கிளைமாக்ஸ் வடிவமைக்கப்பட்ட விதம் ரசிகர்கள் கண்ணில் கண்ணீரை  எட்டிப் பார்க்க வைக்கிறது.சொந்த கிராமத்திற்க்கு திரும்பும் போது டாப்ஸி தன் காலனிகளை கழற்றி விட்டு நிலத்தில் நடக்கும் போது ரசிகர்கள் தங்களை அறியாமல் கை தட்டுகிறார்கள்.

படத்தின் இறுதியில் பல நாடுளில் இருந்து வறுமை காரணமாக எல்லை தாண்டி செல்பவர்களில் பலர் இறந்து விடுகிறார்கள் என்று சொல்லும் போது நெஞ்சம் வலிக்கிறது.  ஷாருக், டாப்ஸி இருவரில் யார் நன்றாக நடித்துள்ளார்கள் என்று பிரித்து சொல்ல முடியாத அளவில்  வாழ்ந்து காட்டியுள்ளார்கள். காதலை சொல்லா மலேயே காதலர்களாக நடித்துள்ளார்கள். விக்கி கௌசல், விக்ரம் கோசர், போமன் இராணி என அனைவரும் கதாபாத்திரத்திற்கான பங்களிப்பை சரியாக செய்துள்ளார்கள்.

Ck முரளிதரன், மனுஷ் நந்தன், அமித் ராய், குமார் பங்கஜ் இந்த நால்வரும் இணைந்து பஞ்சாப்பின் கிராமம் முதல் லண்டன் வரை ஒளிப்பதி வை ஒரு ஓவியம் போல செய்துள்ளார்கள்.ப்ரீதம் சக்ரபூர்த்தியின் இசையியல் பாடல்களும், அமன் பன்ட்டின் பின்னணி இசையும் இணைந்து உணர்வோடு ஒன்ற செய்து விடுகிறது.                   இப்படத்தின் கதைக்  களம் பஞ்சாப் மாநிலமாக இருந்தாலும், எடுத்துக் கொண்ட அம்சம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பதால் நம்மால் சுலபமாக் படத்தில் ஒன்ற முடிகிறது.

logo
Kalki Online
kalkionline.com