‘டிடிஎஃப் வாசன் அப்பாவி பையன்:’ ஷாலின் சோயா பதிவால் ரசிகர்கள் ஷாக்!

ttf vasan shalin zoya
ttf vasan shalin zoya

நடிகை ஷாலின் ஜோயா தனது காதலர் டிடிஎஃப் வாசனுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ள பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.

பிரபல யூடியூபராக வலம் வரும் டிடிஎஃப் வாசன், அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்படுவார். கடந்த வருடம் கூட காஞ்சிரபும் அருகே பைக் சாகசம் செய்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரது பைக் லைசன்ஸை தடை செய்தது. இவருடைய யூடியூப் சேனலையே பிளாக் செய்ய வேண்டும் என நீதிமன்றம் கண்டித்தது. பிறகும் திருந்தாத வாசன் காரில் போன் பேசியபடியே வேகமாகச் சென்று மற்றொரு வழக்கில் சிக்கினார். இந்த வழக்கில் நீதிமன்றம் அவரைக் கண்டித்து ஜாமீன் கொடுத்தது.

நண்பர்கள் சிலர் நல்ல புத்தி சொன்னதை அடுத்து அவர்களுடன் சேர்ந்து வாசன் ஒரு பிசினஸ் தொடங்கி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவரை யூடியூபில் 40 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இதனிடையே, ‘மஞ்சள் வீரன்’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை செல் அம் என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கெனவே திருவிக பூங்கா என்கிற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

இதைத் தொடர்ந்து தற்போது ஐபிஎல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் போஸ்டர் நேற்று வெளியாகி பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. இச்சூழலில் டிடிஎஃப் வாசனுடன் நெருக்கமாகப் பழகி வந்த நடிகை ஷாலின் ஜோயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் ஒன்றாக இருக்கும் சில படங்களைப் பதிவிட்டு, பிறந்த நாள் வாழ்த்து கூறி இருக்கிறார். இதிலிருந்து இருவரும் காதலிக்கிறார்கள் என்று நெட்டிசன்கள் மத்தியில் தகவல் பரவியது.

இந்நிலையில், "நான் சந்தித்த மிகச் சிறந்த மனிதர் அவர். அவர் யாரையும் காயப்படுத்தவில்லை, அவர் யாரையும் காயப்படுத்தவும் மாட்டார் என்று நான் நம்புகிறேன். இந்த இளம் வயதில், வெளி உலகத்தில் யாருக்கும் தெரியாமல் பல உயிர்களை அவர் கவனித்து வருகிறார். எனக்குக் கொஞ்ச காலமாகத்தான் அவரைத் தெரியும். அவர் மிகவும் கனிவானவர், அப்பாவி பையன் என்று எனக்குத் தெரியும்" என்று இன்ஸ்டாவில் உருகி உருகி எழுதியிருக்கிறார் ஷாலின்.

மேலும், "அனைவரும் அவரிடம் அன்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவருக்கு எந்த கெட்ட எண்ணமும் இல்லை. அவரைப் போன்ற மனிதர்கள் ரொம்ப அபூர்வம். மிகவும் விலை மதிப்பற்றவர். இவரைப் போன்றவர்களை என்ன ஆனாலும் கைவிடக் கூடாது. அன்புள்ள வாசா, நீ உண்மையிலேயே ஒரு ஜெம்" என்றும் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com