

பிரபல நடிகை ஷாலினி அஜித்தின் சகோதரராக அறியப்படுபவர் ரிச்சர்ட் ரிஷி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் 1990ல் வெளியான 'அஞ்சலி' படத்தில் சிறுவனாக நடித்து அறிமுகமாகி, பின்னர் 'காதல் வைரஸ்', 'நாளை' போன்ற நிறைய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இருந்தும் அவர் நடித்த படங்கள் எதுவும் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.
இதையடுத்து, 2020ல் மோகன் ஜி இயக்கத்தில் வெளியான 'திரௌபதி' படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகளும் கிளம்பிய நிலையில், ரிச்சர்ட் ரிஷியும் எல்லோராலும் பிரபலமாக அறியப்பட்டார். அதன்பின்னர் மறுபடியும் மோகன் ஜி படமான 'ருத்ர தாண்டவம்' படத்திலும் கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார்.
இந்நிலையில், ரிச்சர்ட் ரிஷி, நடிகை யாஷிகா ஆனந்துடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, யாஷிகா ஆனந்த், ரிச்சர்ட் ரிஷிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் பலரும், இருவரும் காதலிப்பதாக அதை எடுத்துக்கொண்டு தங்கள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.