ஷாருக்கான் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. இன்று ஜவான் ஒடிடி ரிலீஸ்..!

ஷாருக்கான் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. இன்று ஜவான் ஒடிடி ரிலீஸ்..!

டிகர் ஷாருக்கான் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஜவான் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் அட்லி, ஷாருக்கான் கூட்டணியில் உருவான ஜவான் திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கடந்த  செப்.7ஆம் தேதி உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.  ஷாருக்கான் இரண்டு வேடங்களில் நடிக்க, ஹீரோயினாக நயன்தாரா நடித்திருந்தார்.  விஜய் சேதுபதி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்தார்.

இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் உலகளவில் ரூ.1200 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.  இந்த வெற்றியின் மூலம் ஒரு வருடத்தில் தொடர்ந்து இரண்டு ரூ.500 கோடி வசூல் செய்த ஒரே நடிகர் என்ற பெருமையை ஷாருக்கான் தட்டிச் சென்றார்.

இந்நிலையில்,  ஜவான் திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  நடிகர் ஷாருக்கானின் 58வது பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் நிறுவனம் SRKs Janamdin என்ற பெயரில் கவுண்ட்டவுனைத் தொடங்கியுள்ளதால்,  இப்படம் இன்று நெட்பிளிக்ஸில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com