ராமராஜனின் 'செண்பகமே' பாடல் நடிகையா இது? வைரலாகும் போட்டோ!

Shanti priya
Shanti priya

நடிகர் ராமராஜன் உடன் எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படத்தில் நடித்த நடிகை சாந்தி பிரியாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை பானு பிரியாவின் சகோதரி தான் சாந்தி பிரியா. தமிழ் சினிமாவில் நிஷாந்தி எங்கிற பெயரில் தான் அறிமுகமானார். ஆந்திர மாநிலம், ராஜமுத்திரியில் பிறந்த இந்த சகோதரிகள் ஒரு காலத்தில் சினிமாவில் கோலோச்சினார்கள் என்றே சொல்லலாம். இவரின் சகோதரி பானு பிரியா அர்ஜுன், சத்யராஜ், கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார்.

நடிகர் சாந்தி பிரியா என்ற நிஷாந்தி தெலுங்கில் 1987 ஆம் ஆண்டு, Kaboye Alludu என்கிற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் அதே ஆண்டு, நடிகர் ராமராஜன் ஹீரோவாக நடித்த 'எங்க ஊரு பாட்டுக்காரன்' படத்தின் நாயகியாக நடித்தார். பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில்... இடம்பெற்ற 'செண்பகமே செண்பகமே' பாடல், 'மதுர மரிக்கொழுந்து வாசம்' போன்ற பாடல்கள் நிஷாந்தியை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது. இன்றளவும் பேருந்து பாடல்களில் இந்த பாடல் ஒலித்து கொண்டு தான் இருக்கிறது.

90-களில் முன்னணி நடிகையாக அறியப்பட்ட, நிஷாந்தி மற்ற தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் அதிக கவனம் செலுத்தியதால் 10-திற்கும் குறைவான தமிழ் படங்களிலேயே நடித்தார். அக்கா பானுபிரியாவை பீட் பண்ணும் அளவுக்கு தன்னுடைய கேரியரில்... உச்சசத்தை எட்டும் வாய்ப்பு இருந்தும், 1992-ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் சித்தார்த் ராய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு மும்பையிலேயே செட்டில் ஆனார். திருமணத்திற்கு பின்னர் கமிட் ஆகி இருந்த ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து விட்டு 1994-ஆம் ஆண்டு முழுமையாக திரையுலகில் இருந்து விலகினார். இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ள நிலையில், கடந்த 2004-ஆம் ஆண்டு தான் நிஷாந்தியின் கணவர் திடீர் என மரணம் அடைந்தார்.

கணவரின் மரணத்திற்கு பின்னர் அதில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்த இவர், பின்னர்... சில ஹிந்தி சீரியல்களில் நடிக்க துவங்கினார். பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான இவர் மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய 54 வயதிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு மாடலிங் செய்து அசத்தி வருகிறார். இவரின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது வெளியாகி கவனம் பெற்று வருகிறது.

Shanthi priya
Shanthi priya
Shanthi priya
Shanthi priya

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com