
“மிக அதிகமான ரஜினியின் படங்களை இயக்கிய டைரக்டர் என்ற முறையில், ரஜினியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில், எனக்கு எப்போதுமே ஒரு தனி அன்பும் மரியாதையும் உண்டு. தாங்கள் நடத்துகிற ரசிகர் மன்ற விழாக்கள் தொடங்கி, அவர்கள் வீட்டுத் திருமணம் வரை தங்கள் ‘தலைவரே’ வந்து கலந்துகொண்டு, தங்களுக்கு மாபெரும் கெளரவத்தை அளிக்க வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் அனைவருமே ஆசைப்படுவார்கள். ஆனால், அது பிராக்டிகலாகச் சாத்தியமா? எனவே, அவர்கள் என்னை அழைப்பது வழக்கம். அந்த வகையில், ஒரு சமயம், ரஜினி ரசிகர் ஒருவர் தம்முடைய திருமணத்துக்கு என்னை அழைத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று நான் சென்றபோது, எனக்கு இலேசான அதிர்ச்சி ஏற்பட்டது.
யாராவது, தன் திருமண நாளன்று தலைக்கு மொட்டை போட்டுக் கொள்வார்களா? அந்த ரஜினி ரசிகர் அதைத்தான் செய்திருந்தார். “என்னப்பா! கல்யாண மாப்பிள்ளை மொட்டை போட்டிருக்கியே?” என்று நான் அவரிடம் கேட்க, அவர் சிரித்துக்கொண்டே “ஸ்டைலாக “சிவாஜி... தி பாஸ்... மொட்டை பாஸ்” என்று கூறினார்.
மறுபடியும் அவரிடம் “தம்பி! வீட்டுல பெரியவங்க ஒண்ணும் சொல்லலையா?” என்று கேட்டபோது, “எங்க வீட்ல எல்லோருமே சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்தான் சார்! நீங்க வந்து கல்யாணத்தை நடத்தி வைக்கிறது சூப்பர் ஸ்டாரே நேரில் வந்து வாழ்த்தினது போல சார்!” என்றார். மணமகளிடம், “என்னம்மா! மாப்பிள்ளை மொட்டை போட்டுக்கிட்டு வந்து நிக்கிறாரே என்றால், அந்தப் பெண் வெட்கம் மேலிட, “நானும் சூப்பர் ஸ்டாரோட தீவிர ரசிகை சார்!” என்றார்.”
பி.கு:- மிக அதிகமான ரஜினியின் படங்களை இயக்கியவரும், ரஜினி சார்பாக, ரஜினிக்குப் பதிலாக விழாக்களில் கலந்து கொண்டவரும் இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்பவரும் டைரக்டர் எஸ்.பி.முத்துராமன் சார்.
1. ரஜினியின் 100வது படம் என்ன?
2. பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம் – நீயும்
ஒத்துக்கிட்டு கூட வர வேணும்”
- இந்தப் பாடல் இடம் பெற்ற படம் எது?
3. கமலுக்கு வில்லனாக ரஜினி நடித்த படம் எது?