புறநானூறு படப்பிடிப்பு தள்ளிப்போவது ஏன்?.. நடிகர் சூர்யாதான் காரணமா?

Puranaanooru movie update
Puranaanooru movie update

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் சூர்யா மற்றும் சுதா கொங்கரா கூட்டணியின் அடுத்த படமான புறநானூறு படத்தின் அப்டேட் வெளியானது. இதனையடுத்து படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றிருந்த நிலையில், இன்னும் படப்பிடிப்பு  தொடங்கவில்லை என்பதால் சில குழப்பங்கள் எழுந்துள்ளன.

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்திற்காக நடிகர் சூர்யா தனது கடும் உழைப்பைக் கொடுத்து நடித்திருக்கிறார். கங்குவா படத்தின் பணிகளை முடித்தப் பிறகு சூர்யா சுதா கொங்கராவின் புறாநானூறு படத்தில்தான் நடிப்பார் என்ற செய்தி வெளியானது. இப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்‌ரியா, விஜய் வர்மா ஆகியோர் நடிக்கப்போவதாக அப்டேட் வெளிவந்தது. அதேபோல் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

புறநானூறு படத்தை சூர்யாவே தனது 2D என்டெர்டையின்மென்ட்டில் தயாரிக்க முன்வந்தார். சென்ற ஆண்டு அக்டோபர் மாதமே படப்பிடிப்பை ஆரம்பிப்பதாகக் கூறினார்கள். ஆனால் அது நடக்கவில்லை. அடுத்து நவம்பர் மாதம் ஆரம்பிக்கலாம் என்று படக்குழு முடிவெடுத்தது. ஆனால் அதுவும் சில காரணங்களால் தள்ளிப்போனது. அதற்கு அப்படத்தில் நடிக்கப் போகும் சில நடிகர்களின் கால்ஷீட் கிடைக்காததே காரணம் என்று சினிமா வட்டாரத்தினர் கூறுகின்றனர். இதனையடுத்து அனைவரின் கால்ஷீட் கிடைக்க இந்த வருடம் ஏப்ரல் மாதமாகிவிடும் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக சூர்யாவிற்கு பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. ஏனெனில், சூர்யா ஒரு வருடத்திற்கு ஒரு படமாவது ட்ரீம் வாரியர் தயாரிப்பு நிறுவனத்திற்கு நடித்து கொடுப்பதாக வாய்மொழி உறுதியளித்து இருக்கிறாராம். இது ஒன்று இருக்க, இன்னொரு புறம் அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் படத்தில் சூர்யா நடிக்க ஒப்புதல் அளித்துவிட்டார் என்றும், அந்த படத்திற்கான பணிகள் நடந்து வருகிறது என்றும் கூறுகின்றனர். அதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படமும் சூர்யாவிற்கு உள்ளது. இப்படத்தில் இயக்குனர் அமீர் வில்லனாக நடிக்கவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால், ரசிகர்கள் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:
தனுஷின் 50வது படம் ‘ராயன்’: ரத்தக்கறையுடன் மிரட்டும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
Puranaanooru movie update

ஆகையால் ஏப்ரல் மாதம் நடிகர்களின் கால்ஷிட் கிடைத்தாலும் புறநானூறு படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகவும் வாய்ப்புள்ளது என்றே கூறப்படுகிறது. இது சம்பதப்பட்ட அறிவிப்பை சுதா கொங்கராவும் சூர்யாவும் கொடுத்தால் மட்டுமே படப்பிடிப்பு பற்றிய தகவல் உறுதியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com