சினிமாவாகும் ‘பைரி’ என்ற குறும்படம்.. இயக்குனர் யார் தெரியுமா?

பைரி இயக்குனர் ஜான் கிளாடி.
பைரி இயக்குனர் ஜான் கிளாடி.
Published on

'நாளைய இயக்குனர் சீசன் 5' ல் பங்கேற்ற இயக்குனர் ஜான் கிளாடித்தான் 'பைரி' படத்தை இயக்கியுள்ளார். பந்தய புறாவைக் கதைக்களமாகக் கொண்ட இப்படத்தை தனுஷின் மாரி படம் போல் எடுத்துள்ளனர்.

இந்த படத்தில் அனைவருமே புதுமுகம். முதலில் குறும்படமாக எடுத்த இப்படத்தை தற்போது சினிமாவாக மாற்றியுள்ளனர். மேலும் இப்படத்தைப் பற்றி இயக்குனர் ஜான் கிளாடி கூறியது, “பந்தயப் புறா வளர்ப்பில் ஆக்ஷனையும் எமோஷனையும் கலந்து இந்தப் படத்தில் சொல்லியிருப்பேன். மேலும் இது ஒரு அம்மாவிற்கும் பையனுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தைப் பற்றியும் இருக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் நீங்கள் அதிகமாக புறா பந்தயத்தைப் பார்க்கலாம். பலர் பரம்பரை பரம்பரையாக புறா பந்தயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக 'அறுகுவிளை' என்ற கிராமத்தில் அதிகமான புறாக்கள் உண்டு.

படத்தின் கதைப்படி பார்த்தீர்கள் என்றால் ஒரு  குடும்பம் வழிவழியாக புறா வளர்த்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் அந்த புறா வளர்ப்பினால் குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஆகையால் தனது மகனாவது நல்ல வேலையில் சேர வேண்டும் என்று அம்மா நினைக்கிறார். அந்த அம்மாவின் கனவு பலித்ததா என்பதுதான் படம். புறாக்களை வேட்டையாடும் குணம் கொண்ட கழுகு இனம்தான் ‘பைரி’. இந்த பந்தய புறாக்களை தமிழக அளவில் மட்டுமல்ல இந்திய அளவிலுமே வளர்த்து வருகிறார்கள்.

சென்னையில் பொறுத்தவரையில் அதிகமான கிளப்புகள் உள்ளன. அதனை ‘ஹோமர்’ பந்தயமென்று கூறுவார்கள். அந்த பந்தயத்தன்று புறாக்களை கிளப்பிற்கு கொண்டுவந்துவிடுவார்கள். அந்த புறாக்கள் அனைத்திற்கும் டேப் போட்டு நம்பர் கொடுப்பார்கள். இந்த பந்தயம் 100 கிலோ மீட்டர், 200 கிலோ மீட்டர், 1000 கிலோ மீட்டர் தூரம் என்று பிரித்து பறக்க விடுவார்கள். எந்த புறா வீடு வந்து சேர்கிறதோ அந்த புறாவே பந்தயத்தில் வெற்றிபெறும்.

இதையும் படியுங்கள்:
இன்று விண்ணில் பாயும் GSLV – F14 விண்கலத்தின் நோக்கம் இதுதானா?
பைரி இயக்குனர் ஜான் கிளாடி.

அதேபோல் சென்னையில் இன்னொரு புறா பந்தயமும் நடைபெறும். மாரி படத்தில் வருவது போல் கரண புறா என்ற பந்தயம். இதில் புறாக்கள் எவ்வளவு பல்டி அடிக்கிறதோ அதற்கேற்றவாரு வெற்றி புறா அறிவிக்கப்படும். கன்னியகுமாரி மாவட்டத்தில் சாதா புறா அல்லது வளர்ப்பு புறா பந்தயம் மிகவும் பிரபலமாகி கொண்டு வருகிறது. எவ்வளவு மணி நேரம் புறா அதிகமாக பறக்கிறது என்பதை வைத்து வெற்றி புறா அறிவிக்கப்படும். குறைந்த பட்சம் அந்த புறா 20 மணி நேரம் பறந்தால்தான் வெற்றி லைனிற்குள்ளேயே நுழைய முடியும்.

நான் நளைய இயக்குனர் போட்டியில் பங்கேற்ற போது ஒரு ஆக்ஷன் படம் எடுக்கக் கூறினார்கள். அப்போதுதான் எனக்கு இந்த பந்தயப் புறா பின்னணியில் நடந்த சம்பவம் நினைவிற்கு வந்தது. இப்போது அந்த குறும்படம் பெரிய படமாக மாறியுள்ளது.  பைரி படத்தில் ஹீரோவாக சையத் மஜீத் நடித்திருக்கிறார். மேலும் மேக்னா எலன்,விஜி சேகர், சரண்யா ரவிச்சந்தரன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்போது வெளியீட்டிற்கு  தயார் ஆகிவிட்டோம்” என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com