பெண்களின் தன்னம்பிக்கை பற்றிய தீமில் வெளியான ஸ்ருதி ஹாசனின் ‘Monster Machine’ மியூசிக் வீடியோ சமூக வலைத்தளத்தில் கவனம்பெற்றுள்ளது.
இந்திய சினிமாவில் ஸ்ருதி ஹாசன் திறமை வாய்ந்த நடிப்பின் மூலம் தனக்கான இடத்தை பிடித்து இன்றும் அசைக்கமுடியாத நடிகையாக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் மட்டும் தலைசிறந்தவராக இல்லை அதைவிட ஒரு சிறந்த பாடகியாகவும் வலம் வருகிறார். நடிப்பிற்கு இடைவேளை விட்டாலும் எப்போதும் பாடுவதற்கு மட்டும் இடைவேளை விட்டதே இல்லை.
தமிழில் ’கண்ணழகா’, ’எல்லே லெம்மா’( ஏழாம் அறிவு), ’முன் அந்தி’ , ’உன் விழிகளில் விழுந்த’,’அடியே கொள்ளுதே’, ’போ நீ போ’, ’உயிரே என் உயிரே’(பூஜை) போன்ற பாடல்களும் இந்தியில் ’ஷட் அப் யுவர் மவுத்’, ’தன் யே மேரா’ என மொத்தம் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.
ஸ்ருதி ஹாசனின் குரலும், ஹை பிட்சும் டானில் அவர் பாடுவதை கேட்பவர்களை புள்ளறிக்க செய்துவிடும். 2010ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் எழுத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ”செம்மொழியான தமிழ் மொழி” பாடல் வெளியானது. அதில் ஸ்ருதி ஹாசன் ஒரு பகுதியை பாடினார். அதில் ஸ்ருதி ஹாசன் பாடும் பகுதிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் 6 ஸ்கேல் கொண்ட ஒரு ஹைபிட்ச் பாட சொல்லி கொடுத்தார். ஸ்ருதி ஹாசன் தனது முழு எனெர்ஜியுடன் அந்த பகுதியை ஆறு ஸ்கேலிற்கு அதிகமாக இழுத்து பாடியது கேட்பவர்களை புள்ளரிக்க செய்தது. இப்போதுவரை கலைஞரின் வரிகளும் ஸ்ருதி ஹாசனின் குரலும், அந்த ஹை பிட்சும் கேட்பவர்களை உரையவைக்க செய்கிறது.
நடிகை ஸ்ருதியின் கனவு ஒரு பாடகியாகவும், ஒரு இசையமைப்பாளராகவும் ஆக வேண்டும் என்பதுதான். அதற்காக பல மியூசிக் வீடியோக்கள் இசையமைத்து அவரே பாடி வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் ‘Monster Machine’ என்ற மியூசிக் வீடியோவை ஸ்ருதி ஹாசனே எழுதி, கம்போஸ் செய்து, பாடியும் வெளியிட்டுயிருக்கிறார். இது ஒரு பெண்ணின் தன்னம்பிக்கை பற்றி டார்க் தீமில் இயக்கியிருக்கிறார் த்வார்கேஷ் பிரபாகர். இந்த மியூசிக் வீடியோவை Blck என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. வெளியிட்ட 24 மணி நேரத்திலையே 24k பார்வையாளர்களுக்கு மேல் சென்றுள்ளது.
‘Monster Machine’ பாடலில் ஸ்ருதி ஹாசன் குரலையும் ஆங்கில வரிகளையும் கேட்கும்பொழுது உண்மையாகவே தன்னம்பிக்கை கூடுவது போல்தான் உணரவைக்கிறது.