பொன்னியின் செல்வனில் நடிக்க மணிரத்தினத்திடம் கேட்கும் தைரியம் இல்லை - சித்தார்த்

பொன்னியின் செல்வனில் நடிக்க மணிரத்தினத்திடம் கேட்கும் தைரியம்  இல்லை - சித்தார்த்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகி பாபு நடித்துள்ள படம் ‘டக்கர்’. இப்படத்தில் திவ்யான்ஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, அபிமன்யுசிங், விக்னேஷ்காந்த், ராம்தாஸ் நடித்துள்ளனர். நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.நிவாஸ் பிரசன்னா ‘டக்கர்’ படத்துக்கு இசையமைத்துள்ளார். ‘டக்கர்’ படம் வரும் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த் "எந்த இடத்திலும் நிற்காத வேகமான ஒரு படம் தான் ’டக்கர்’ . இந்தப் படத்தில் ‘டக்கர்’ என்ற தலைப்பை பயன்படுத்தியதன் காரணம், மோதல். ஒரு பொண்ணுக்கும் ஹீரோவுக்குமான மோதல்கள் தான் அது. சமீபகாலத்தில், சினிமாவில் வந்த கதாநாயகிகள் கதாபாத்திர வடிவமைப்பில் இது வித்தியாசமாக எனக்குப் பட்டது.

ஆகஸ்ட் மாதம் வந்தால் ‘பாய்ஸ்’ படம் வெளியாகி 20 வருடங்கள் ஆகிறது. இந்த 20 வருடத்தில் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த இரண்டு வருடங்களில் நிறைய நல்ல படங்களில் கமிட் ஆகியுள்ளேன். உங்கள் அனைவரது ஆதரவுடனும் ‘டக்கர்’ நிச்சயம் வெற்றி பெறும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.

முன்பெல்லாம் சமூக வலைதளங்களில் அனைத்து பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்தேன். இப்போது என்னை நம்பி இவ்வளவு படங்கள், தயாரிப்பாளர்கள் இருப்பதால் அமைதியாகி விட்டேன். சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைத்து உழைக்கிறேன். ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் டிஸ்கஷனில் கலந்து கொண்டேன். ஆனால் அதில் நடிக்கவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மணிரத்னத்திடம் கேட்கும் தைரியம் எனக்கு இல்லை." இவ்வாறு நடிகர் சித்தார்த் பேசினார்.

logo
Kalki Online
kalkionline.com