சிம்பு ரசிகர்களுக்கு கமல் வைத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்.. ரசிகர்கள் உற்சாகம்!

சிம்பு - கமல்
சிம்பு - கமல்

நடிகர் சிம்புவின் 48வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

நடிகர் சிலம்பரசன் மாஸான நடிகராக இருந்தாலும் கடந்த சில வருடங்களாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியாமல் இருந்தார், இந்த நிலையில், மாநாடு படம் கம்பேக் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களில் நடித்து அசத்தினார். இந்த நிலையில் இவரின் அடுத்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த அறிவிப்பை சிலம்பரசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தினை இயக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

நடிகர் கமல்ஹாசன் நிறைய படங்களில் கமிட்டாகியுள்ளதால், பல படங்களில் ட்ராப் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. இந்த நிலையில், இதன் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்க உள்ளதாக ராஜ் கமல் அலுவலக வட்டாரம் கூறுகிறது. தற்போது இதன் ஃப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

30 கிராபிக்ஸ் டிஸைனர்கள் இந்தப் படத்துக்காக பணிபுரிகின்றனர். பிப்ரவரி 3 சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப் படம் குறித்த புதிய அறிவிப்பு அல்லது போஸ்டர் வெளியிட திட்டமிட்டுள்ளனர். சிம்பு பிறந்தநாளுக்கு ராஜ் கமல் நிறுவனம் அளிக்கும் சர்ப்ரைஸ் பரிசாக அது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com