பத்துதல
பத்துதல

OTT யில் சிம்புவின் 'பத்து தல' !

Published on

சிம்புவின் 'பத்து தல' திரைப்படத்தை பெரிய தொகை கொடுத்து கைப்பற்றியுள்ளது பிரபல OTT நிறுவனம் ஒன்று.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் நடிகர் சிலம்பரசன். இவர் தொடர்ந்து நல்ல திரைப் படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாநாடு, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட திரைப் படங்கள் பெரும் வெற்றியை பெற்றது‌‌ குறிப்பிடதக்கது. இந்த திரைப்படங்கள் தியேட்டரில் நன்றாக வடிவதோடு OTT யிலும் நன்றாகவே ஓடியது.

இதனை தொடர்ந்து சிம்பு நடிப்பில் அடுத்ததாக ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணாஇயக்கத்தில் உருவாகும் 'பத்து தல' திரைப்படம் வெளியாக உள்ளது.

தற்போது இந்த படத்தின் OTT உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெரிய தொகைக்கு கைப்பற்றி இருப்பதாக தெரியவந்துள்ளது. திரையரங்குகளில் படம் வெளியான பிறகே அமேசான் பிரைம் வீடியோவில் இந்த படம் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பத்து தல திரைப்படம் நாள் வசூலை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com