கடந்த 2017ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘மஃப்டி’-யின் ரீமேக் தான் ’பத்து தல’. இப்படத்தில், சிம்பு கேங்ஸ்டராகவும், கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார். இந்த படத்தினை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
இயக்குனர் கிருஷ்ணா இயக்கி இருந்த இப்படத்தை, ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படம் குறித்த அறிவிப்பு கடந்த 2019-ம் ஆண்டே அறிவிக்கப்பட்ட நிலையில், படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டதால், சிம்பு தன்னுடைய உடல் எடையை குறைத்து, 'மாநாடு' மற்றும் 'வெந்து தணிந்தது காடு' ஆகிய படங்களில் நடித்தார். எனவே மீண்டும் சுமார் 108 கிலோ வரை எடையை கூட்டி, இப்படத்தில் நடித்து முடிந்த பின்னர், மறுபடியும் உடல் எடையை குறைத்தார்.
முதல் நாளே, சிம்புவின் 'பத்து தல' படம் தமிழகத்தில் மட்டும் 7 கோடி வசூலித்ததாகவும், ஒட்டு மொத்தமாக 12.3 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகார பூர்வமாக தெரிவித்த நிலையில், தற்போது இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சிம்பு இதுவரை நடித்திராத, மிகவும் மெச்சூர்டான கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. கன்னடத்தில் வெளியான, முஃட்டி படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது இந்த படம். சிம்பு ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.
படம் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை, பெற்று வருகிறது இப்படம். மேலும் இதுவரை காட்டிராத மாஸ் கெட்டப்பில் சிம்புவை காட்டியுள்ளதாகவும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இரண்டாவது நாளில், இப்படம் முதல் நாள் வசூலை மிஞ்சும் வகையில் சுமார் 17 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது