சினம் -விமர்சனம்

எமோஷனல் திரில்லர் வகையை சேர்ந்தது
 சினம் -விமர்சனம்

-ராகவ் குமார்.

நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு என்னதான் தீர்வு? தீர்வு நமக்குள் தான் இருக்கிறது என்று சொல்லும் படம்தான் சினம்.

ஜி. என். ஆர். குமாரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம்  நேர்மையான சப் இன்ஸ்பெக்டர் பாரி, தனது மனைவியை அவரது தாய் வீடான வேலூருக்கு அனுப்புகிறார்.

அப்படி சென்ற மனைவி கொலை செய்யப்பட்டு அன்று இரவு பிணமாக மீட்க படுகிறார். அருகில் மற்றொரு கொலை செய்யப்பட்ட ஆணின் சடலமும் கிடைக்கிறது. பிரேத பரிசோதனை தகவலில் மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. 

இந்த கொடுமையை யார் செய்தது, உடன் கிடைத்த ஆண் யார்? என விசாரணையாக கதை நகர்கிறது. முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும், பின் பாதியில் தீ பரவுவதை போல வேகமாக கதை நகர்கிறது.

மனிதர்கள், தடயங்கள் இவற்றையெல்லாம் தாண்டி ஒரு குழந்தைக்கு சொல்லப்படும் கதை குற்றவாளிகளை பிடிக்க உதவுகிறது. சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் இது எமோஷனல் திரில்லர் வகையை சேர்ந்தது.

எங்கும் தொய்வில்லாத திரைக்கதையே படத்திற்கு கூடுதல் பலம். சில்வாவின் சண்டைக்காட்சிகள் சிறப்பு. அருண் விஜய்யை தவிர வேறு யாரையும் இந்த கதாபாத்திரத்திற்கு நாம் நினைத்து பார்க்க முடியாத அளவில் அருண் விஜய் நடித்து இருக்கிறார். ஆக்ஷன், செண்டிமெண்ட் காட்சிகளில் தனித்துவமான நடிப்பு தெரிகிறது.

பாலக் லால்வாணி குழந்தைக்கு அம்மாவாகவும், ரொமான்டிக் காட்சிகளில் இயற்கையாகவும் நடித்துள்ளார். சினம் படத்தின் விமர்சனம் வெளியாகும். இந்த நேரத்தில் கூட தமிழகத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளத்தாக செய்திகள் வருகின்றன.

சட்டம் தரும் தண்டனை மட்டும் போதுமா?  பெற்றோர்களின் பங்கு இதை தடுப்பதில் என்ன என்பது பற்றி இப்படம் சினம் சொல்கிறது.

சினம் -நாம் கொள்ள வேண்டியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com