SingaPoreSaloon Review
SingaPoreSaloon Review

சிங்கப்பூர் சலூன் விமர்சனம்!

சிங்கப்பூர் சலூன் எமோஷனல் சலூன்!(2.5 / 5)

கோகுல் இயக்கத்தில் RJ பாலாஜி, சத்யராஜ், லால், ஷிவாணி ராஜசேகர் நடித்து வெளிவந்துள்ள படம் சிங்கப்பூர் சலூன்.  தென்காசி பகுதியில் வாழும்  சிறுவன் கதிர்க்கு படிப்பைவிட  முடி வெட்டுவதில்தான் ஆர்வம் இருக்கிறது. வளர்ந்து இன்ஜினியரிங் படித்து விட்டு சென்னையில் சிங்கப்பூர்  சலூன்  என்ற சலூன்  கடையை திறக்கிறார். பல்வேறு காரணங்களால் இந்த சலூன் பிரச்சனையை சந்திக்கிறது.இந்த பிரச்சனைகளில்இருந்து சிங்கப்பூர் சலூன் எப்படி தப்பிகிறது என்று,'கதை' சொல்லியிருகிறார் டைரக்டர் கோகுல்.     

சமீப காலமாக  சுய தொழில் செய்வது, விளையாட்டு, போன்ற மைய்ய கதைகளை கொண்டு படங்கள் வந்து கொண்டு உள்ளன. இந்த வரிசையில் வந்துள்ள மற்றொரு படம் சிங்கப்பூர் சலூன். படத்தின் முதல் பாதி ஹீரோ பாலாஜி தனது பாணியில் நகைசுவையாக  கதை சொல்வது ரசிக்க முடிகிறது. இரண்டாவது பாதி டிவியின் நடன போட்டி,பறவைகள், சதுப்பு நிலம், ஏழை மக்கள் என பல மிக்ஸ்ர்களை கலந்து தந்துள்ளார் டைரக்டர்.

ஒரே படத்தில் பல விஷயங்கள் வருவதால் நாம் குழம்பி விடக் கூடாது என்பதற்காக, சிங்கப்பூர் சலூன் என்ற டைட்டிலை பல கேரக்டர்கள் சொல்லும் படி பார்த்து கொள்கிறார். இருந்தாலும் படம் நகரும் விதத்தில் முடிவும் முன்பே நமக்கு தெரிந்து விடுகிறது. கோகுல் இப்படத்தில் செய்த மிக நல்ல அம்சம், லாலின் ஒரு மாறுபட்ட நடிப்பை வெளிகொண்டுவந்தது தான்.குழந்தைகளுடன் நடிக்கும் போது,  குழந்தைகளுக்கான ஒரு துள்ளளுடன், வயதான தோற்றத்தில் ஒரு ஏக்கத்துடனும் கேரக்டராக வாழ்ந்தே விட்டாரையா மனிதர் என்று லால் நடிப்பை பாராட்ட தோன்றுகிறது.

சத்தியாராஜ் தனக்கே உரிய காமெடி கலந்த வில்லத் தனம் செய்கிறார். Rj பாலாஜி நடிப்பில் இதற்கு முன்பு உள்ள படங்களில் நடித்ததை போலவே நடித்துள்ளார். கொஞ்சம் மாத்தி யோசிங்க பாஸ்.சுகுமாரின் ஒளிப்பதிவும் சுமார் ரகம் தான்.விவேக் மெர்வினின் இசை மெலடியாக உள்ளது.அரவிந்த் சாமி, லோகேஷ் கனகராஜ், ஜீவா போன்றவர்கள் நடுவில் வந்து அட்வைஸ் செய்து விட்டு போகிறார்கள் 

யதார்த்தம் இல்லாமல் எமோஷனல் மட்டுமே பல காட்சிகளில் இருப்பதால், சிங்கப்பூர் சலூன் ஒரு சாதாரண சலூனாக இருக்கிறது. சிங்கப்பூர் சலூன் -பழைய சலூன்.

logo
Kalki Online
kalkionline.com