விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில், விஜயா ஒரு செக் வைக்கிறார். அதாவது முத்துவும் மீனாவும் வீட்டைவிட்டு போனால்தான் அந்த விஷயத்தை செய்வேன் என்கிறார். அது என்ன விஷயம் என்று பார்ப்போம்.
சத்யாவின் அம்மா போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார். முத்துவும் மீனாவும் பதற்றத்துடன் சென்று போலீஸிடம் சத்யாவின் அம்மாவை விடுவிக்குமாறு கேட்கின்றனர். ஆனால், போலீஸ் இன்னும் ஒரு நாளில் சத்யாவை கூட்டி வரவில்லை என்றால், அவர் அம்மாவையே கோர்டுக்கு அழைத்துச் செல்வேன் என்று சொல்லிவிடுகிறார்.
இதைக் கேட்டதும் நான் சத்யாவை கூட்டி வருகிறேன் என்று முத்து சொல்லி சத்யா அம்மாவை அழைத்து செல்கின்றார். இந்த மாதிரியான விஷயத்தை வக்கீல் மூலமாக நகர்த்தினால் ஒரு சப்போர்ட் கிடைக்கும் என்று போலீஸ் சொல்கிறார்கள். உடனே முத்து மீனாவை கூட்டிக்கொண்டு வக்கீலை பார்க்கப் போகிறார்கள்.
வக்கீல் இந்த வீடியோ ஆதாரம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுவிட்டது. எல்லோரும் பார்த்திருப்பார்கள். ஆகையால், கேஸ் கைமீறி போய்விட்டது. ஆனால், உங்கள் அம்மா வந்து வாபஸ் வாங்கினால் கேஸை முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று யோசனை வழங்குகிறார்.
உடனே முத்துவும் மீனாவும் வீட்டிற்கு செல்கிறார்கள். உடனே மீனா, “ நம்ம பேசினால் எப்படி அத்தை ஒப்புக்கொள்வார்?” என்று கேட்கிறார். அதற்கு முத்து நாம் பேசினால் அம்மா கேஸை வாபஸ் வாங்கமாட்டாங்க. அப்பாவிடம் சொல்லி பேச சொல்வோம் என்று அண்ணாமலையிடம் சென்று பேசுகிறாரக்ள். மீனா அண்ணாமலையிடம் கெஞ்சுகிறார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த மனோஜ், சத்யா நிச்சயம் தண்டனை அனுப்பி வைக்க வேண்டும் அதற்கு ஜெயிலுக்கு போனால் தான் சரிப்பட்டு வரும் என்று சொல்கிறார். உடனே முத்து மனோஜை குத்தி காண்பிப்பது போல பேசுகிறார். பதிலில்லாமல் மனோஜ் அமைதியானார்.
இதனையடுத்து அண்ணாமலை விஜயாவிடம் பேசுவதற்கு பார்வதி வீட்டுக்கு போகிறார். விஜயாவிடம் சத்யாவின் வாழ்க்கையையும் மீனாவின் குடும்பத்தைப் பற்றி எடுத்துச் சொல்கிறார்.
உடனே விஜயா ஒரு செக் வைக்கிறார். அதாவது நான் கேஸை வாபஸ் வாங்குகிறேன். ஆனால், முத்து மற்றும் மீனா வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்கிறார். வேறு வழியில்லாமல் முத்துவும் மீனாவும் சம்மதம் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே ரோகிணி தான் விரித்த வலையில் தானே விழுவதுபோல் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்.