மிரட்டும் சைரன் பட ட்ரைலர்.. எப்படி இருக்கு?

Siren Trailer
Siren Trailer

ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது.

சினிமாவில் பெண்களின் மனதை கொள்ளையடிக்கும் நாயகனாக வலம் வரும் நடிகர் ஜெயம்ரவி, பல படங்களில் தோல்வியை சந்தித்தாலும், அடுத்தடுத்து விடாமுயற்சியோடு வெற்றி படங்களையும் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் சைரன். பொன்னியின் செல்வன் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இறைவன் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

முன்னதாக வெளியான அகிலன் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவான இந்த சைரன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். சமுத்திரகனி, யோகிபாபு, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மொத்த ட்ரெய்லரும் விறுவிறுப்பாக கடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரைலரின் இடம்பெற்றுள்ள வசனங்கள் மூலம் நடிகர் ஜெயம் ரவி ஆம்புலன்ஸ் ட்ரைவர் என்பதை உணர முடிகிறது. மேலும் அவர் சிறையிலிருந்து வெளியே வரும் காட்சி, பொய்யான கொலைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி தன்னை நிரபராதி என நிரூபிக்கும் போராட்டமாக தெரிகிறது.

இருவேறு தோற்றங்களில் காட்சியளிக்கும் ஜெயம்ரவின்யின் போராட்டம் தான் முழு கதையாக இருக்கும் என தெரிகிறது. போலீசாக வரும் கீர்த்தி சுரேஷ் கெத்தாக நடந்து கொள்கிறார். இந்த படம் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படியுங்கள்:
முடிவிலிருந்து முயற்சியால் முன்னேறுவதற்கான 7 வழிகள்!
Siren Trailer

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com