கோலிவுட்டில் தற்போதைய 'ஹாட் டாபிக்' இதுதான்! மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இணையும் தனுஷ் - சிறுத்தை சிவா!

Dhanush Siruthai Siva join film
Siruthai Siva and Dhanush
Updated on

ஆந்திராவின் பெரிய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் ஒரு படம் தயாரிக்க உள்ளது. இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க , தனுஷ் நாயகனாக நடிக்க உள்ளார் என்பது தான் கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக்காக உள்ளது.

வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் தனுஷும், கிராமப்புற பகுதியில் படத்தின் கதையினை ஆரம்பித்து அதன் பின்னர் , விறுவிறுப்பாக கதையை நகர்புறத்திற்கு நகர்த்தும் சிறுத்தை சிவாவும் தற்போது இணைய உள்ளனர்.

தனுஷை பொறுத்தவரையில் இப்படிப்பட்ட கதையில் மட்டும் தான் நடிப்பேன் என்ற நடிகர் இல்லை. அவர் நடுத்தர வயதைக் கடந்த அப்பாவாக அசுரன் திரைப்படத்திலும் , ராயன் திரைப்படத்தில் ரவுடியாகவும், குபேரன் திரைப்படத்தில் பிச்சைக்காரன் வேடத்திலும் நடித்து உள்ளார். தனுஷிற்கு தேவை எப்போதும் ஒரு மாறுபட்ட கதைக்களம்.

சிறுத்தை சிவா தனக்கென்று ஒரு பக்காவான டெம்ப்ளேட் ஒன்றை வைத்துள்ளார். சிறுத்தை , வீரம் , விசுவாசம் , அண்ணாத்தே போன்ற திரைப்படங்கள் நாயகர்களை மிகவும் மாஸாக வெளிப்படுத்துவதும் , திரைக்கதை வெற்றியை நோக்கி நகரும் வகையிலும் அமைக்கட்டிருக்கும். காதல், குடும்ப செண்டிமெண்ட் , நகைச்சுவை , கொடூரமான வில்லன் , அதிரடி சண்டைக் காட்சிகள் என்று மாசான திரைப்படமாக இவரது கதைக்களம் இருக்கும்.

நடிகர் தனுஷிற்கு தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நல்ல மார்க்கெட் உள்ளது. தனுஷின் மார்க்கெட்டை உயர்த்தும் வகையிலும் அவருக்குள்ள பிரபலமான இந்திய முகத்தை பயன்படுத்தும் வகையிலும், இந்த புதிய திரைப்படத்தினை பான் இந்தியா திரைப்படமாக உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. அதற்கேற்ற வகையில் படத்தினை பிரம்மாண்டமாக தயாரிக்கவும் , அதன் கதைக்களம் பான் இந்தியா திரைப்படத்திற்கு ஏற்ற வகையிலும், எளிதில் ரசிகர்களை கவரும் வகையிலும் களத்தினை உருவாக்கி வருகிறது.

இறுதியாக தனுஷ் நடிப்பில், விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான 'கர' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற 'அமரன்' திரைப்படத்தின் இயக்குனரான ராஜ்குமார் பழனிச்சாமியின் புதிய திரைப்படத்தில் தனுஷ் நடித்த வருகிறார். இந்த திரைப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை தற்காலிகமாக 'D55' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தை முடித்த பின்னர் 2026 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2027 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சிறுத்தை சிவா மற்றும் தனுஷ் இணையும் புதிய திரைப்படம் தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.சமீபகாலமாகவே தனுஷ் ஜனரஞ்சகமான திரைப்படங்களில் நடிக்காமல், வித்தியாசமான கதைகளில் மட்டுமே நடித்து வருவதால், அவரது ரசிகர்கள் நீண்ட காலமாக ஒரு கமர்சியல் திரைப்படத்தை தனுஷிடம் எதிர்பார்க்கின்றனர். அவர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த செய்தி அமைந்துள்ளது. சிவா தனுஷ் கூட்டணி கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டாலும் இன்னும் இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

logo
Kalki Online
kalkionline.com