பொங்கலுக்கு வரும் அயலான்.. விற்றுத்தீர்ந்த தமிழ்நாடு உரிமை!

அயலான்
அயலான்

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் தமிழ்நாடு உரிமை விற்றுத்தீர்ந்தது.

நடிகர் சிவகார்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தினை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குனர் ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ளார். படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். யோகி பாபு, பால சரவணன், பானுப்ரியா, கருணாகரன், இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தினை 100 கோடி 24AM ஸ்டுடியோஸ் மற்றும்  PhantomFX ஸ்டுடியோஸ் இரண்டு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு  இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

பொருளாதார நெருக்கடியால் பல வருடங்கள் அண்டர்புரொடக்ஷனில் இருந்த அயலான் 2024 பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. கடந்த ஆண்டே வெளியாகவிருந்த இந்த படம் சிஜி வேலைகள் முடியாத காரணத்தால் ரிலீஸ் தேதி தள்ளிபோனது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், அயலான் திரைப்படத்தின் தமிழ்நாடு ஏரியாக்களின் விநியோக உரிமை அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளது. தமிழ்நாடு விநியோக உரிமையை 9 ஏரியாக்களாக பிரித்துள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, வடஆற்காடு, தென்ஆற்காடு, திருச்சி, மதுரை, சேலம், கோவை, திருநெல்வேலி ஆகியவையே அந்த ஒன்பது ஏரியாக்கள். இவற்றில் அயலான் படத்தின் விநியோக உரிமை சில ஏரியாக்களில் எம்ஜி எனப்படும் மினிமம் கியாரண்டி முறையிலும், சில ஏரியாக்களில் டிஸ்டிரிபியூஷன் முறையிலும் விற்கப்பட்டுள்ளன. அயலான் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 26-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com